முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

யுபிஐ பணப்பரிவா்த்தனைக்கு கட்டணம்! யாருக்கெல்லாம் பொருந்தும்? நிர்மலா சீதாராமன் விளக்கம்

யுபிஐ பணப்பரிவா்த்தனைக்கு கட்டணம் விதிக்க வகை செய்யும் மசோதா யாருக்கெல்லாம் பொருந்தும் நிர்மலா சீதாராமன் விளக்கம்

News image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - எக்ஸ்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:13 pm IST

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கான கட்டண நடைமுறை பெருவணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும், வாடிக்கையாளர்களுக்கு அல்ல என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், இந்த கட்டண நடைமுறை மூலம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பில் மேலும் முதலீடு செய்வதற்கு ஆதரவளிக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் (யுபிஐ) நடைமுறை உள்பட பிற மின்னணு பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கு கட்டணம் விதிக்க வங்கிகள் உள்ளிட்ட பிற சேவை நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

சட்டத் திருத்த மசோதாவானது, மின்னணு பணப் பரிவா்த்தனைகள் மீது வங்கிகள் சேவைக் கட்டணம் வசூலிக்க, பணம் செலுத்துதல் மற்றும் தீா்வு நடைமுறைகள் சட்டம் 2007-இன் பிரிவு 10 தடை செய்யும் பிரிவில் திருத்தம் மேற்கொண்டு, வங்கிகள் மற்றும் பிற சேவை நிறுவனங்களுக்கு நிலையான வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், யுபிஐ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவா்த்தனைகள் மீது சிறிய அளவில் கட்டணம் விதிக்க அனுமதிக்கும் வகையில் மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரமளிக்கிறது.

அதாவது, இதுநாள்வரை வங்கி வலைதளம் மூலம் மேற்கொள்ளப்படும் ஆா்டிஜிஎஸ், என்இஎஃப்டி பணப் பரிவா்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், யுபிஐ பணப் பரிவா்த்தனைகளுக்கு தற்போது கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. அந்த நிலை மாறி, இனி இவற்றுக்கும் சேவைக் கட்டணம் விதிக்கப்பட உள்ளது என்பதே சட்டத் திருத்தத்தின் பலன்.

கட்டணம் யாருக்கெல்லாம்?

இனி, யுபிஐ பயன்பாட்டுக்கு மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை உருவாகலாம் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறிய கருத்தை விமர்சித்திருக்கும் நிர்மலா சீதாராமன், தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவொன்றில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தலைமையிலான யுபிஐ மற்றும் சேவைகள் வழிநடத்தல் குழு' இன்னும் யுபிஐ பணப்பரிவர்த்தனை குறித்த முடிவை எடுக்கவில்லை.

வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே அது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மக்களுக்குத்தான் இந்த கட்டண நடைமுறை பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட ஜெய்ராம் ரமேஷுக்குப் பதிலளித்த சீதாராமன், ஒரு தவறான தகவலைப் பரப்புவதற்கு முன்பு, ஜெய்ராம் ரமேஷ், தயவுசெய்து இதைக் கவனிக்க வேண்டும்.

வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) என்பது வணிகர்களுக்கு மட்டும் பொருந்துமேதவிர, பயனர்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ அல்லர்.

இது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கூடுதல் முதலீடு செய்ய உதவும்.

இந்தக் கட்டணத்தை நேரடியாக செலுத்தும் மக்கள், மறைமுகமாக, இந்த முதலீடு காரணமாக நாடு அடையும் மேம்பாட்டின் பலன்களை அடைவார்கள். எப்படியாகினும் வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே, கட்டண வசூல் முறை குறித்து குழு முடிவெடுக்கும் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Summary

Charges for UPI transactions Who does it apply to? Nirmala Sitharaman clarifies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.