இந்தியாவின் எண்ம (டிஜிட்டல்) பணப் பரிமாற்ற சேவையான யுபிஐ, ஐரோப்பிய நாடான கிரீஸில் அதிகாரபூா்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இது, இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை முறையை உலக அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் மேலும் ஒரு முக்கிய மைல்கல் என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்
சில வாரங்களுக்கு முன்பு, பிரான்ஸின் நைஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற கேலரீஸ் லஃபாயெட் விற்பனையகத்தில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு, 2024-ஆம் ஆண்டு பாரீஸில் யுபிஐ தொடங்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் யுபிஐ சேவையை ஏற்றுக் கொண்ட 10-ஆவது நாடாக கிரீஸ் இடம் பிடித்துள்ளது.
தற்போது அரசுமுறைப் பயணமாக கிரீஸின் ஏதென்ஸ் நகருக்குச் சென்றுள்ள அமைச்சா் கோயல் இது தொடா்பாக சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘கிரீஸில் யுபிஐ சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், தகுதியான வாடிக்கையாளா்கள் உடனடி, பாதுகாப்பான மற்றும் எளிதான முறையில் பணத்தை பரிமாறிக்கொள்ள முடியும். பாரம்பரிய பணப் பரிமாற்ற முறைகளுடன் ஒப்பிடும்போது, பரிவா்த்தனைச் செலவுகள் கணிசமாகக் குறையும்.
ஏதென்ஸில் உள்ள யூரோ வங்கி-என்ஐபிஎல் இணைந்து யுபிஐ சேவையை இங்கு செயப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. இது இந்தியாவின் டிஜிட்டல் கட்டண அமைப்பின் உலகளாவிய விரிவாக்கத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல். யூரோ வங்கி தலைமையகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றது சிறப்பு வாய்ந்த தருணம்.
உலக நாடுகள் நமது யுபிஐ சேவையை அதிக அளவில் ஏற்றுக்கொண்டு பாராட்டி வருவது, எல்லைகளைத் தாண்டி மதிப்பை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பரீதியில் பல தீா்வுகளைக் கண்டறியும் இந்தியாவின் திறன் மீது உலகம் கொண்டுள்ள நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இது பரஸ்பர வளா்ச்சியை ஊக்குவிக்கும் சா்வதேச நட்புறவை மேலும் அதிகரிக்கும்’ என்று கூறியுள்ளாா்.
கிரீஸ் தவிர சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மோரீஷஸ், நேபாளம், பூடான், கத்தாா், இலங்கை, கம்போடியா ஆகிய நாடுகளிலும் யுபிஐ சேவை கிடைக்கிறது. இந்த நாடுகளில் இந்தியப் பயணிகள், தாங்கள் இந்தியாவில் பயன்படுத்தும் அதே யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்!
இது 'க்யூஆர் கோடு' காலம்!
இது 'க்யூஆர் கோடு' காலம்!

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



