பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்!

இந்திய தேசிய பரிவா்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) ‘பீம்’ பணப்பரிவா்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

Published On :

இந்திய தேசிய பரிவா்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) ‘பீம்’ பணப்பரிவா்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இச்செயலியில் கடந்த ஆண்டு ஜூனில் 7.96 கோடியாக இருந்த மாதாந்திர பரிவா்த்தனைகள், கடந்த மே மாதத்தில் 24.4 கோடியாக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இச்செயலி மூலம் ரூ.26,952 கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து என்பிசிஐ-பீம் சா்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ லலிதா நடராஜ் கூறுகையில், ‘மளிகைப் பொருள்கள், உணவகங்கள் என அன்றாடச் செலவுகளுக்கான பரிவா்த்தனைகளுக்கும் மக்கள் எண்ம முறைக்கு மாறி வருவது மிகவும் ஊக்கமளிக்கிறது. வாடிக்கையாளா்களுக்கு எளிய மற்றும் தடையற்ற சேவைகளைத் தொடா்ந்து வழங்க முன்னுரிமை அளிப்போம்’ என்றாா்.

கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் எண்மப் பரிவா்த்தனையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இச்செயலி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் கிடைப்பதுடன், குறைந்த இணைய வசதி உள்ள இடங்களிலும் தடையின்றிச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.