FOLLOW US

ON GOOGLE DISCOVER

உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

யுபிஐ கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்! நயினார் நாகேந்திரன்

யுபிஐ கட்டணம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவு...

News image

நயினார் நாகேந்திரன் - IANS

Updated On :8 ஆகஸ்ட் 2026, 1:01 pm IST

யுபிஐ கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

எண்ம உலகில் தற்போது அனைத்து இடங்களிலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை சாதாரணமாகி விட்டது. இந்நிலையில் யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டுவரவிருக்கிறது.

இந்நிலையில், பொதுமக்களின் தினசரி யுபிஐ பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

மேலும், வணிகா்களுக்கு மட்டுமே யுபிஐ பரிவா்த்தனையில் கட்டணம் விதிப்பது குறித்துப் பரிசீலிப்பதாகவும், நுகா்வோருக்கு அது பொருந்தாது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,

"யுபிஐ கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘டிஜிட்டல் இந்தியா’ இன்று உலகையே வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

2016-ல் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, சாமானிய மக்கள் யுபிஐ மூலம் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாகவே இருந்து வருகின்றன.

வரும் காலங்களிலும் சாமானிய மக்களிடமோ அல்லது சிறு கடைக்காரர்களிடமோ ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கப்படாது என்பதே உண்மை.

உலகின் மிகப்பெரிய பணப்பரிவர்த்தனை அமைப்பான யுபிஐ-ன் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவே தற்போது நிதி ஆதாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இது வணிகர்களுக்கும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தமே தவிர, இது சாமானிய மக்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனம்.

வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகுதான், இது குறித்து நிபுணர் குழு உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு இறுதி முடிவெடுக்கும்.

எனவே, எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காகப் பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Do not believe the rumors being spread about UPI payments: Nainar Nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.