
‘என்னை பலமுறை தாக்கினார்’... நடுவானில் குத்தப்பட்ட இந்திய விமானியின் விடியோ வைரல்!
ஃப்ளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சார் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்துக்குப் பிந்தைய விடியோக்கள் வெளியாகியுள்ளதைப் பற்றி...

இந்திய விமானி ஸ்மித் மச்சார்
துபையிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்து கொண்டிருந்த ஃப்ளைதுபை விமானத்தில் இந்திய விமானி மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்துக்குப் பிந்தைய விடியோக்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு கடந்த புதன்கிழமை (செப். 30) காலை 174 பயணிகளுடன் போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தைச் சேர்ந்த ஃபிளைதுபை எஃப்இசட்1073 விமானம் புறப்பட்டுச் சென்றது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதை இயக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சக விமானி கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து, அவரை எதிர்த்து விமானி ஸ்மித் சண்டையிட விமானம் கட்டுப்பாடின்றி வேகமாகக் கீழே சென்றதாகக் கூறப்படுகிறது.
நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி திடீரென இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்திவிட்டு, விமானத்தை வீழ்த்தும் நோக்கில் கட்டுப்பாட்டை மாற்றியுள்ளார். இதனால், 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், அடுத்த சில நிமிஷங்களில் சுமார் 17,000 அடிக்கு கீழே பறந்து, தள்ளாடியது.
இதனைத் தொடர்ந்து, வேறு இரண்டு விமானிகள் விமானத்தை இயக்கி சௌதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினர். பின்னர், தாக்கப்பட்ட இந்திய விமானி உடனடியாக தபூக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சக விமானி கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ஸ்மித் மச்சார் ரத்த வெள்ளத்தில் போராடிவரும் விடியோ காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தக் காணொளியில், மச்சார் பலத்த காயங்களுடன் விமானத்துக்குள் உதவி பெற்று வருவதும் காயத்தால் கடுமையாக அவதியடைவதும் பதிவாகியுள்ளது.
அந்த விடியோவில் காயமடைந்த விமானி மச்சார், “அவர் என்னை பலமுறை தாக்கினார்” என்று கூறுவதும் பதிவாகியுள்ளது.
First Visual of Captain Smit Machchhar!
— SOUVIK CHONGDER (@chongder_s51958) October 1, 2026
The Hero who saved the World...!!! #SmitMachchhar #Flydubai #IndianPilot #IndianPride #IndianHeroes #Aviation #AviationSafety #Courage #India #BreakingNews@narendramodi @PMOIndia @IsraeliPM @flydubai pic.twitter.com/Ut9gfifWnV
Summary
A day after the cockpit attack on a flydubai flight FZ1073, a video showing injured Indian Captain Smit Machchhar moments after the incident has surfaced, offering a glimpse of the chaos that unfolded at 30,000 feet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




