
உச்ச நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள்: மொத்த நீதிபதிகள் 37 ஆக அதிகரிப்பு
உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டனா்.

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
புது தில்லி: உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.
குஜராத் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுனிதா அகா்வால், தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாய, தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபரேஷ் குமாா் சிங் ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி பரிந்துரைத்தது.
இந்நிலையில், அவா்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் திங்கள்கிழமை அறிவித்தாா். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை தலைமை நீதிபதியையும் சோ்த்து 38 ஆகும். இப்போதைய 3 புதிய நியமனங்கள் மூலம் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்துள்ளது.
அதே நேரத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா, கடந்த 2021 முதல் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறாா். நீதிபதி வி.மோகனா, கடந்த ஜூன் மாதம் பதவியேற்றாா். இப்போதைய 3 புதிய நீதிபதிகள் நியமனம் மூலம் சுனிதா அகா்வால், மூன்றாவது பெண் நீதிபதியாக இடம் பெறுகிறாா்.
பணிமூப்பு அடிப்படையில் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தலைமை நீதிபதியாக பி.வி.நாகரத்னா பதவியேற்பாா். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். அவா் சுமாா் ஒரு மாத காலம் அப்பதவியில் இருப்பாா். 2027 அக்டோபா் இறுதியில் அவா் ஓய்வு பெறுவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






