திரைப்படமாகும் சோனியா காந்தியின் சுயசரிதை!
திரைப்படமாகும் சோனியா காந்தியின் சுயசரிதை - பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்-ஐப் பற்றி...
சோனியா காந்தி.
சோனியா காந்தியின் சுயசரிதையான பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்-ஐ திரைப்படமாக்கவுள்ளதாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஜக்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.
‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற 544 பக்க சுயசரிதை புத்தகத்தை சோனியா காந்தி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரிவான ஆல்பிரட் ஏ நோப் பதிப்பகம் வெளியிடவிருந்தது.
புத்தகத்தில் சில மாற்றங்களையும், சில பகுதிகளை நீக்கவும் பதிப்பகம் கேட்டுக் கொண்டதாகவும், அதனை சோனியா காந்தி மறுத்த நிலையில், இந்தப் புத்தகத்தை வெளியிடப்போவதில்லை என்று பென்குயின் நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, இந்தப் புத்தகத்தை ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் (நவ. 10) வெளியிட்டது.
இத்தாலியில் பிறந்து இந்தியாவின் பிரதமர் நேரு குடும்பத்தில் மருமகளாக நுழைந்து, நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றது வரையிலான தனது வாழ்க்கைப் பயணத்தை சோனியா விவரித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள “Belonging: A Journey of Love” சுயசரிதையில், ராஜீவ் காந்தியுடனான காதல், இந்திரா காந்தி குடும்பத்தில் ஏற்பட்ட மோதல்கள், நெருக்கடி நிலை, ராஜீவ் காந்தி படுகொலை, பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது, மன்மோகன் சிங் ஆட்சி, பிரதமர் மோடியுடனான அரசியல் கருத்து வேறுபாடுகள், உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், சோனியா காந்தியின் சுயசரிதையைத் திரைப்படமாக்கப் போவதாக தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஜக்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பிற்காக, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஜுலகண்டி ஆஞ்சநேயுலு ரூ. 2 கோடி தருவதாகத் தெரிவித்துள்ளார். திரைப்படம் தயாரிப்பதற்கான செலவை தேர்தல் செலவுகளுடன் ஒப்பிட்டுள்ள ஜக்கா ரெட்டி, ஒரு நல்ல இயக்குநரை தேர்வு செய்யுமாறும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
Summary
Sonia Gandhi's autobiography Belonging: A Journey of Love is creating a stir with the revelations and reflections of the Congress leader.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

