பஞ்சாபில் சர்ச்சையாகும் சோனியாவின் சுயசரிதை! 1984 கலவரம் பற்றி விளக்கம் அளிக்க வலியுறுத்தல்!
பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சோனியா காந்தியின் சுயசரிதை சர்ச்சையை உருவாக்கியுள்ளது...

சோனியாவின் சுயசரிதையால் பஞ்சாபில் சர்ச்சை... - X @INCIndia
பஞ்சாபில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையால் 1984 கலவரம் அரசியல் பேசுபொருளாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, “பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்” எனும் சுயசரிதை நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூலில், முன்னாள் பிரதமர்களும் தனது குடும்பத்தினருமான இந்திரா காந்தி (மாமியார்) மற்றும் ராஜீவ் காந்தி (கணவர்) ஆகியோர் ஆட்சியில் நடைபெற்ற முக்கிய விவகாரங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், 1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட சீக்கியர் படுகொலைகள் மற்றும் கலவரங்கள் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளது பஞ்சாபில் பெரும் அரசியல் விவகாரமாக மாறியுள்ளது.
இதையடுத்து, 1984 கலவரங்கள் குறித்து 42 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சியாக ஒரு திட்டமிட்ட அரசியல் தந்திரத்தை சோனியா காந்தி மேற்கொள்வதாக, பஞ்சாபின் ஷிரோமணி அகாலி தளம் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதுபற்றி, ஷிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில்,
“1984-ல் ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்களைக் கொன்றவர்களுக்கு சோனியா காந்தி நற்சான்றிதழ் வழங்கியிருக்கும் விவகாரத்தில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் குற்றகரமான மௌனத்தைக் கலைக்க வேண்டும்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி சீக்கியர்களின் உயிரைக் காக்க ராணுவத்தைக் களமிறக்கும் நடவடிக்கையை ராஜீவ் காந்தி ஏன் நிறுத்த முடிவு செய்தார் என்பது குறித்து சோனியா காந்தியிடம் பஞ்சாபின் காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் கேட்பார்களா?” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், “ஆபரேஷன் புளூஸ்டார்” நடவடிக்கைகளின் காட்சிகளைப் பார்த்ததும் இந்திரா காந்தியின் கண்களில் "வலி மற்றும் மனவருத்தத்தின் கண்ணீர்" இருந்ததாக சோனியா காந்தி கூறியிருப்பது, சீக்கிய சமூகத்தின் காயங்கள் மீது உப்பைப் பூசுவது போன்றது என பஞ்சாப் மாநில பாஜக தலைவர் கேவல் சிங் தில்லான் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Punjab, it is reported that questions regarding the 1984 riots have emerged following the the autobiography of Sonia Gandhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


