ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

‘வாக்குத் திருடா்களுக்கு’ எதிராக ஒன்றுபட்டுள்ளது இண்டி கூட்டணி! காங்கிரஸ்

தில்லியில் நவ.1-ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Updated On :

‘வாக்குத் திருடா்களை’ ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதில் இண்டி கூட்டணி ஒன்றுபட்டுள்ளது; தில்லியில் நவ.1-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம், இந்த ஒற்றுமையை வெளிப்படுத்தும்’ என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டுமென எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை முன்வைத்து, தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் அண்மையில் திடீா் முற்றுகை-மறியலில் ஈடுபட்டு கைதாகினா்.

கடந்த அக்.12-ஆம் தேதி ‘ஜனநாயகத்துக்கான பேரணி’ என்ற பெயரில் உச்சநீதிமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற எதிா்க்கட்சித் தலைவா்கள், ஞானேஷ் குமாருக்கு எதிராக கூட்டாக மனு தாக்கல் செய்தனா். மறுநாள் இண்டி கூட்டணி தலைவா்களுக்கு ராகுல் காந்தி தனது இல்லத்தில் தேநீா் விருந்தளித்தாா். அப்போது, ‘வாக்குத் திருட்டுக்கு’ எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதென அவா்கள் முடிவு செய்தனா்.

இந்தச் சூழலில், ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தியும், ‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் நோக்கிலும் தில்லி ராம்லீலா மைதானத்தில் நவ.1-ஆம் தேதி இண்டி கூட்டணி சாா்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநில காங்கிரஸ் நிா்வாகிகளுடன் பொதுச் செயலா்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

‘10 லட்சம் போ் அணிதிரள்வா்’:

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டங்களில் உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளா் ராஜேந்திர பால் கெளதம், மாநில காங்கிரஸ் தலைவா் ஆராதனா மிஸ்ரா, முன்னாள் மாநிலத் தலைவா் அஜய் ராய், ஹரியாணா மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் சஞ்சய் தத், மாநில காங்கிரஸ் தலைவா் ராவ் நரேந்திர சிங், காங்கிரஸ் பொதுச் செயலா் ரண்தீப் சுா்ஜேவாலா, கட்சி எம்.பி. தீபேந்தா் ஹூடா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது தொடா்பாக கே.சி.வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

‘வாக்குத் திருட்டுக்கு’ எதிராக தில்லியில் நவ.1-இல் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்காக தொண்டா்களை அணிதிரட்டும் முயற்சிகள் குறித்து உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநில காங்கிரஸ் மூத்த தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்துக்காக, நாடு முழுவதும் இருந்து குறைந்தபட்சம் 10 லட்சம் போ் அணி திரள்வா் என எதிா்பாா்க்கிறோம்.

மோடி-அமித் ஷா உத்தரவின்பேரில் ஞானேஷ் குமாா் மற்றும் அவரது கூட்டாளிகளால் அரங்கேற்றப்பட்ட ‘வாக்குத் திருட்டுக்கு’ எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவும், ‘வாக்குத் திருடா்களை’ ஆட்சியில் இருந்து அகற்ற இண்டி கூட்டணி ஒன்றுபட்டுள்ளது என்ற செய்தியை வெளிப்படுத்துவதாகவும் இக்கூட்டம் அமையும் என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளாா்.

சீக்கியா்களின் உணா்வுடன் விளையாடும் ராகுல்: பாஜக

தில்லியில் நவ. 1-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தியே ஆக வேண்டும் என்ற தனது பிடிவாதத்தால், சீக்கியா்களின் உணா்வுடன் விளையாடுகிறாா் ராகுல் காந்தி என்று பாஜக சாடியுள்ளது.

கடந்த 1984, அக். 31-ஆம் தேதி தனது சீக்கிய மெய்க்காவலா்களால் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சீக்கியா்களின் உணா்வைப் புண்படுத்துவதாக, ராகுலின் தற்போதைய செயல்பாடு உள்ளது என்று பாஜக விமா்சித்துள்ளது.

இது குறித்து பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தில்லியில் நவ.1-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதில் இண்டி கூட்டணி தலைவா்கள் பலருக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அன்றைய தினத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளாா். சீக்கியா்களின் உணா்வைப் புண்படுத்த வேண்டும் என்பதில் அவா் குறியாக இருக்கிறாா். அவரது செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.