தில்லியில் காங்கிரஸார் பேரணி: தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது

தில்லியில் பேரணியில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது குறித்து...

Lok Sabha LoP Rahul Gandhi being detained by the Police near Jantar Mantar

தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது - PTI

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி பேரணி செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தில்லி காவல்துறை கைது செய்தது.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், காங்கிரஸாரும் செவ்வாய்க்கிழமையில் (அக். 6) போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலகலை வலியுறுத்தி, தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் இன்றும் (அக். 7) பேரணி நடத்த முயன்றனர்.

இந்த நிலையில், சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் முயற்சி செய்தனர். மேலும், சாலையின் நடுவே தடுப்புகளாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மீது காங்கிரஸ் தொண்டர்கள் தர்னா செய்தனர்.

இதனையடுத்து, தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோரை தில்லி காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்பகுதியில் இருந்து வெளியேற்றி, காவல் வாகனத்தில் ஏற்றினர்.

Summary

Lok Sabha LoP Rahul Gandhi being detained by the Police near Jantar Mantar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.