சீனாவில் டிரம்ப் - ஜின்பிங் - புதின் முத்தரப்பு சந்திப்பு தொடங்கியது!வி.எஸ். பாபு மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்!கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும்; முஸ்லிம்கள் அதிகரிப்பார்கள்! ஆய்வில் தகவல்!வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு? மருத்துவமனை விரைந்தார் ஆதவ் அர்ஜுனா! போலீஸ் குவிப்புடாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!

ராஜீவ் மடியில் சோனியா... ராகுல் காந்திக்கு ஆதரவாகப் பதிவிட்ட சோனாக்‌ஷி சின்ஹா!

ராகுல் காந்தியை விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு நடிகை சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில் குறித்து...

Rahul Gandhi, Rajiv - Sonia Gandhi, Sonakshi Sinha.

ராகுல் காந்தி, ராஜீவ் - சோனியா கந்தி, சோனாக்‌ஷி சின்ஹா. - படங்கள்: எக்ஸ் / சோனியா காந்தி, இன்ஸ்டா / சோனாக்‌ஷி சின்ஹா.

Updated On :

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்தினை விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் 526 பக்கங்கள் கொண்ட சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் கடந்த நவ.10 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது.

இந்தப் புத்தகத்தில், சோனியா காந்தியின் இளமைப்பருவம், காதல், தனிப்பட்ட வாழ்க்கை, உடல் நலம், ராஜீவ் காந்தி, குழந்தைகள், இந்திரா காந்தி, அரசியல் வாழ்வு என பல விவகாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்புத்தகம் விற்பனைக்கு வந்த நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் நவ. 16ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராகுல் காந்தி பேசியது சமூக வலைதளத்தில் சர்ச்சையானது.

இந்த நிகழ்வில், “ஒவ்வொரு மதிய உணவுக்கும் எனது தந்தையின் மடியில் எனது தாய் உட்கார்ந்து உணவு உண்பார். இது வழக்கமானது என்று நான் இருந்தேன். எனது நண்பர்கள் வீட்டிற்குச் செல்லும்போது அப்படி இல்லை. நண்பர்களிடம், ‘ஏன் உங்களது அம்மா, அப்பாவின் மடியில் உட்காரவில்லை?’ எனக் கேட்டேன்.

திடீரென எல்லாமே மாறிவிட்டது. இந்திரா காந்தி சுடப்பட்டார். அடுத்ததாக எனது அப்பாவின் உடல் சுக்குநூறாக வெடித்தது” எனப் பேசினார்.

இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் மாற்று அரசியல் கருத்துடன் இருப்பவர்களிடம் இருந்து விமர்சனங்களாக வந்தன. இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, நவ.17ஆம் தேதி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், சிவன் மடியில் பார்வதி இருக்கும் கர்நாடகத்தின் 12ஆம் நூற்றாண்டுச் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

சோனாக்‌ஷி தனது இன்ஸ்டாவில் வோமேனியா என்ற பக்கத்தின் பதிவைப் பகிர்ந்து கேலியாகப் பதில் அளித்துள்ளார். அந்தப் பதிவில் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பினை விமர்சித்தும் எழுதப்பட்டிருந்தன.

இதனைப் பகிர்ந்த சோனாக்‌ஷி தனது மகன்களுக்கு அறிவுரை சொல்வது போல, “அட, என் வருங்கால குழந்தைகளுக்கு அவர்களது வழியில் என்னவெல்லாம் வருமோ என்று தெரியவில்லை. தயாராக இருங்கள் மகன்களே (தற்போது எங்கே இருக்கிறீர்கள்?)” எனக் கூறியுள்ளார்.

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா 2024ல் ஜாகீர் இக்பாலை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு இன்னும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாத நிலையில், தனது வருங்கால குழந்தைகள் இதுபோல பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறியுள்ளார்.

Summary

Actor Sonakshi Sinha reacts to Rahul Gandhi's 'lap remark' row

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.