வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக ராகுல்: பாஜக கடும் விமர்சனம்
மத்திய பாஜக அரசுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெற ராகுல் காந்தி முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது குறித்து...

ராகுல் காந்தி - கோப்புப் படம்
பாரத் உச்சி மாநாட்டில் மத்திய அரசுக்கு எதிராக வெளிநாட்டுத் தலைவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பதாக் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் உச்சி மாநாட்டில் ஈக்வடார் முன்னாள் வெளியுறவு மந்திரி கில்லூம் லாங் மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனலின் முன்னாள் பொதுச்செயலாளர் சலீல் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசுக்கு எதிராகப் பேசுவதற்காக வெளிநாட்டுத் தலைவர்களை ராகுல் காந்தி அழைப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஆஷிஷ் உஷா அகர்வால் தெரிவித்ததாவது, "ராகுல் காந்தியின் அரசியல் பயணம், இப்போது அரசியல் எதிர்ப்பை விடுத்து, தேச விரோத பாதையை நோக்கி செல்கிறது.
இந்திய அரசியலமைப்பு நிறுவனங்களைக் கேள்விக்குள்ளாக்கி, நாட்டின் ஜனநாயகம் குறித்து சந்தேகங்களை ஒரு வெளிநாட்டு பிரதிநிதி பேசும்போதெல்லாம், அதனைக் கண்டு ராகுல் காந்தி மகிழ்ச்சி அடைகிறார். இந்தியாவின் மீது குற்றம் சாட்டப்படும்போது அவரால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. ஆனால், நாட்டின் மதிப்பு உயரும்போது அவர் அமைதியாக இருக்கிறார்.
நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மட்டுமே ராகுல் காந்தியின் நிரந்தர அரசியல் நிகழ்ச்சி நிரலாக மாறிவிட்டதா? ஜனநாயகத்தில் அரசியல் எதிர்ப்புக்கு இடம் உள்ளது, ஆனால், தேச விரோத நடவடிக்கைகள் எப்போதும் பொறுத்துக் கொள்ளப்படாது.
கில்லூம் லாங் போன்றோரை அழைப்பதன் மூலம், இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஆதரவை ராகுல் காந்தி பெற முயற்சிக்கிறாரா? இந்தக் கூட்டத்தின் பின்னணியில் ஏதேனும் பெரிய அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதா? இதுகுறித்து மக்களுக்கு ராகுல் காந்தி பதில் சொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Summary
Rahul Gandhi puppet of foreign powers, wants regime change with oversees help: BJP
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


