தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

மது அருந்திவிட்டு மக்களவை வந்தவர் பகவந்த் மான்! ராகுல் காந்தி

பஞ்சாப் பிரசாரத்தில் பகவந்த் மானை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தது பற்றி...

Rahul

பஞ்சாப் பிரசாரத்தில் ராகுல் காந்தி - PTI

Updated On :

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மக்களவை உறுப்பினராக இருந்தபோது மது அருந்துவிட்டு வந்தார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, மாநிலத்தில் நிலவும் போதைப்பொருள் அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்தார்.

அவர் பேசியதாவது:

“ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தபோது, ​​நீங்கள் அக்கட்சியின் மீதும், முதல்வர் பகவந்த் மான் மீதும் நம்பிக்கை வைத்தீர்கள். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். அவர்கள் எங்கே போதைப்பொருளை ஒழித்தார்கள்? பஞ்சாபின் எந்தப் பகுதியிலிருந்து போதைப்பொருளை அவர்களால் அகற்ற முடிந்தது? இந்த அச்சுறுத்தலை ஒழிக்க அவர்களுக்குத் துளியும் திறனில்லை. பஞ்சாப் மாநிலம் தில்லியிலிருந்து இயக்கப்படுகிறது.

பகவந்த் மானுடன் நான் மக்களவையில் பணியாற்றியிருக்கிறேன். அவர் எங்களுடன் அமர்ந்து, ங்கேயே நகைச்சுவைகளைப் பேசி மகிழ்வார். காலை 11 மணிக்கே, அவர் பேசும்போது மதுவின் வாடை வீசும். பகவந்த் மான் மது அருந்தக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அவர் மது அருந்த விரும்பினால், அது முற்றிலும் அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

ஆனால், போதைப்பொருள் பழக்கம் எனும் தீமையை நீங்கள் உண்மையிலேயே ஒழிக்க விரும்பினால், உங்கள் முதலமைச்சர் ஒவ்வொரு மாலையிலும் போதையில் இருக்கக்கூடாது. பஞ்சாபுக்காகப் போராடக்கூடிய, போதைப்பொருட்களால் ஏற்படும் துயரத்தை உண்மையாக உணர்கிற, பஞ்சாபின் வலியைத் தன் இதயத்தில் சுமக்கக்கூடிய ஒரு தலைவர் உங்களுக்குத் தேவை” எனத் தெரிவித்தார்.

Summary

Bhagwant Mann came to the Lok Sabha after consuming alcohol! – Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER