டாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!தமிழக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

டாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!

டாடா காட்டிய அக்வானால் ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது

Updated On :

தமிழகம் நோக்கித்தான்.. இல்லை... இல்லை நேரடியாக சென்னைக்குத்தான் என்று போக்குக் காட்டி வந்த அக்வான் புயல் நீங்கள் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் வர முடியாது என ஒடிசா நோக்கி நகர்ந்து வருவதால் வட தமிழக மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டு, மழையே இல்லை என்ற நிலையானது.

தமிழகத்துக்கு அக்வான் டாடா காட்டிய நிலையில், வானிலை நிலவரங்களை கணித்து வெளியிட்டு வரும் பிரதீப் ஜான், நவ. 23ஆம் தேதி முதல் சென்னை, டெல்டா பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது என்ற நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார். மழைக்கு சாதகமான நிலை நிலவுவது குறித்து புகைப்படங்களையும் அவர் இணைத்துள்ளார்.

கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்குப் பருவமழை எப்போது வந்தது, எப்படிப் போனது என நினைவில்லாமல் சேது பட விக்ரம் போல தமிழக மக்கள் தவித்து வரும் நிலையில், வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துவிட்டால் காதல் பட பரத் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது.

நவம்பர் மாதம் தொடங்கி 20 நாள்கள் ஆகப்போகிறது. தீபாவளியை சதி செய்து கொண்டாட விடாமல் பெய்த மழைக்குப் பிறகு பெரிய மழையைக் காணவில்லை.

அர்னாப், முரசு, அடுத்து அக்வான் என வரிசைக் கட்டி வங்கக் கடலில் உருவான புயல்கள் எல்லாம் சொல்லிவைத்தது போல ஆந்திரத்தை நோக்கி நகர்ந்தன. தமிழகத்துக்கு பாராமுகமாகவே இருந்து வரும் வடகிழக்குப் பருவமழை விடைபெறும் முன்பே, கார்த்திகை மாதமும் பிறந்து, கடும் பனிக்காலம் தொடங்கிவிட்டது. ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் ஏசி போட்டது போல குளிரத் தொடங்கிவிட்டது.

அக்வான் புயல் தமிழகத்துக்கு டாடா காட்டியது பற்றி வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது என்னவென்றால், வங்கக் கடலில் நிலவிய ‘அக்வான்’ புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயல், நவ.20-ஆம் தேதி பிற்பகலில் நரசாபூா் - புரிக்கு இடையே வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸா கடற்கரையை தீவிரப் புயலாகக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல்தான் போனது, மழையாவது பெய்யும் என்று இருந்தால், ‘அக்வான்’ புயல் எதிரொலியாக முதலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு, பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையாக மாறியது. இந்த நிலையில், தீவிரப் புயல் முழுவதுமாக ஆந்திரம் நோக்கி நகா்வதால், வட தமிழகத்தில் மழை எச்சரிக்கை முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டுவிட்டது.

அக்வானக்கு பிரியா விடை கொடுத்திருக்கும் தமிழக மக்களுக்கு, வானிலை நிலவரங்களை கணித்து வெளியிட்டு வரும் பிரதீப் ஜான், நவ. 23ஆம் தேதி முதல் சென்னை, டெல்டா பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது என்ற நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார்.

Summary

Akwan bids farewell! Some welcome rain-related news for the people of Tamil Nadu, who have been left disappointed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.