ஆந்திரம் நோக்கி நகரும் அக்வான் புயல்! வட தமிழகத்துக்கு லேசான மழை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் ஆந்திரத்தை நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு...

weather update

கோப்புப் படம்

Updated On :

வங்கக் கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் ஆந்திரத்தை நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், ஆந்திரத்தின் நெல்லூர் - விசாகப்பட்டினம் இடையே நவ. 20 ஆம் தேதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இன்று இரவு தீவிர புயலாக மாறி நகரும் அக்வான் புயல், வரும் 19 ஆம் தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்து 20 ஆம் தேதி கரையைக் கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு மழை உண்டா?

அக்வான் புயல் ஆந்திரக் கடலோரப் பகுதியில் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை. வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மட்டும் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நவ. 18 ஆம் தேதி (நாளை) வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ. 19, 20 தேதிகளில் லேசானது முதல் அதிதீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நவ. 21 ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ. 20 ஆம் தேதி ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழை பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் மீட்புப் படைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Summary

Cyclone 'Akwan' moves towards Andhra Pradesh; light rain expected in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.