ஆக்கப்பூர்வமான, நம்பிக்கைக்குரிய கூட்டமைப்பு: க்வாட் குறித்து பிரதமர் மோடி!

க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து...

க்வாட் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பிரதமர் மோடி. - படம் - எக்ஸ்

Updated On :

க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ. 17) உரையாற்றினார்.

11 நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஆசியான்' கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு பிலிப்பின்ஸ் தலைமைப் பொறுப்பேற்றுள்ளது. இதையொட்டி, பிலிப்பின்ஸின் தலைநகரான மணிலாவில் நடைபெறும் உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று பிலிப்பின்ஸ் சென்றார்.

ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய ‘க்வாட்’ நாடுகளின் தலைவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி மற்றும் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி உள்ளிட்டோர் சந்தித்து கலந்துரையாடினர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பிலிப்பின்ஸ் தலைநகரான மணிலாவுக்கும் க்வாட் கூட்டமைப்புக்கும் இடையே நீண்டகால மற்றும் சிறப்பான பிணைப்பு உள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு நான்கு நாடுகளின் அதிகாரிகளும் முதன்முதலில் இங்குதான் சந்தித்தார்கள். அதன்பின்னர், 10 ஆண்டுகள் கழித்து 2017-ஆம் ஆண்டில் இதே நகரத்தில்தான் குவாட் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

2025 ஜனவரி முதல், தற்போது வரை க்வாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஐந்து முறை சந்தித்துள்ளனர். இது நமது அரசியல் நிலைப்பாட்டுக்கும், நமது கூட்டாண்மை மீதான அர்ப்பணிப்புக்கும் உதாரணமாக அமைகின்றது.

இந்தியாவைப் பொறுத்தவரை, க்வாட் என்பது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் நம்பிக்கைக்குரிய கூட்டமைப்பு ஆகும். கடல்சார் பாதுகாப்பு முதல் விநியோகச் சங்கிலிகள் வரை, புதிய தொழில்நுட்பங்கள் முதல் பேரிடர் மீட்பு வரை, இந்தோ - பசிபிக் முழுவதும் க்வாட் நம்பகமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் முயற்சியாக இருந்து வருகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Summary

Prime Minister Narendra Modi addressed the leaders of the Quad grouping today (Nov. 17).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.