அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு நவ. 16 வரை நீதிமன்றக் காவல்! ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம்!அபாயத்தில் 6 லட்சம் மரங்களும் யானைகள் வாழ்விடமும்!!மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது

பிலிப்பின்ஸில் ‘க்வாட்’ தலைவர்கள் கூட்டம்! மோடி - டிரம்ப் இருதரப்பு சந்திப்பு இல்லை?

பிலிப்பின்ஸில் ‘க்வாட்’ தலைவர்கள் கூட்டத்தில் மோடி, டிரம்ப் பங்கேற்பது பற்றி...

modi trump

பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் - கோப்புப்படம்

Updated On :

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய ‘க்வாட்’ நாடுகளின் தலைவர்கள், ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நாளை மணிலாவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஆசியான்' கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்தோனேசியாவின் மணிலாவில் நாளை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மணிலாவுக்குப் புறப்படவுள்ளார்.

இந்த நிலையில், மணிலாவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய ‘க்வாட்’ நாடுகளின் தலைவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி மற்றும் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவின் ஷென்சென் நகரில் வரும் வியாழக்கிழமை சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்னதாக ’க்வாட்’ தலைவர்களை சந்திக்கவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்புள்ளது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் படுதோல்விக்குப் பிறகு அடுத்தடுத்து உலகத் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப்பின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

‘Quad’ leaders’ meeting in the Philippines - No bilateral meeting between Modi and Trump?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.