பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

தேர்தலில் தோல்வி! பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய டிரம்ப் ஆலோசனை!

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை பதவி நீக்கம் செய்ய அதிபர் டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்...

Trump weighs Hegseth's exit as Iran war fallout deepens after midterm losses

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் - AP

Updated On :

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை பதவி நீக்கம் செய்ய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில், அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. மேலும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சியின் பெரும் தோல்விக்கு ஈரான் மீதான அமெரிக்காவின் போர் மற்றும் அதனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. ஈரான் போரை அமெரிக்க அரசின் நிர்வாகம் கையாண்டது குறித்தும் மக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், பீட் ஹெக்செத் பாதுகாப்பு அமைச்சராகத் தொடர வேண்டுமா? என்பது குறித்து அதிபர் டிரம்ப் தனது நெருங்கிய ஆலோசகர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்துடன், ஈரான் போர் விவகாரத்தில் அரசின் ஆலோசகர்களாகச் செயல்பட்டு வரும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர் உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், பீட் ஹெக்செத்தை பதவி நீக்கம் செய்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், விரைவில் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஃபுளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டீஸ் நியமிக்கப்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.

முன்னதாக, இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி கடும் தோல்வி அடைந்ததற்கு ஈரான் மீதான போர்தான் காரணம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that President Donald Trump is considering dismissing US Secretary of Defense Pete Hegseth.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.