வாஷிங்டனில் கதிரியக்க வெடிகுண்டு தாக்குதலுக்கு ஈரான் திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை!

வாஷிங்டனில் கதிரியக்க வெடிகுண்டு தாக்குதலுக்கு ஈரான் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை...

us - iran

அமெரிக்க அதிபர் டிரம்ப் - ஈரானிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி. - கோப்புப் படம்

Updated On :

வாஷிங்டனில் கொடூரமான கதிரியக்க வெடிகுண்டு தாக்குதலுக்கு ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே போர் வெடித்தது.

இந்த நிலையில், அயதுல்லா கமேனியின் மரணத்துக்கு பழிவாங்கும் நோக்கில், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை குறிவைத்து மிகப்பெரிய கதிரியக்க அல்லது ரசாயன ஆயுதத் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன் டி.சி.யில் தாக்குதல் நடத்த சாத்தியமான இடங்களைக் குறிப்பிட்டு, குறிவைக்கப்பட்டுள்ள அதிகாரிகளையும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், அமெரிக்காவுக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்வதற்கான ஆட்களும் செயல்பாட்டுத் திறனும் ஈரானிடம் உள்ளதா என்பது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் மத்தியில் வேறுபட்ட கருத்து நிலவுவதாக தகவலை மேற்கோள்காட்டி சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லாரன் பிஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“அனைத்து சாத்தியமான அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் நம் நாட்டுக்கு நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், இந்த உளவுத்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில், ’மிக விரைவில்’ போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran plots a 'dirty bomb' attack in Washington! Intelligence warning!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER