முதல்வர் விஜய்யுடன் ஒரேயொரு படம்; பணிப்பெண்ணுக்காக பிரியங்கா வைத்த கோரிக்கை!மதுரை நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டது எவ்வளவு? காவல் ஆணையர் ராஜேந்திரன் பதில்மத்திய கப்பல் துறை அமைச்சருடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு: 5 திட்டங்களுக்கு நிதி வழங்க கோரிக்கை!108 சேவை மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!முதல்வருக்கு அரோகரா; ஆட்சிக்கு முன்பும் பின்பும் ரீல்ஸ்: இபிஎஸ் கண்டனம்அண்ணன் சீர் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்தவெக கல்வி விருது விழா! ராகுலுக்கு முதல்வர் விஜய் அழைப்பு!ஓய்வுபெற்றார் தோனி! சென்னை சூப்பர் கிங்ஸ் ஆலோசகராக நியமனம்!தங்கம் விலை மேலும் குறையுமா? 11 மாதங்களுக்குப் பின்... 1 லட்சத்துக்குக் கீழ்!மதுரை நகைக் கடை கொள்ளை! பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே பதில்!மதுரை நகைக்கடை கொள்ளை! நிஷாந்த் கையில் போட்டிருந்த டாட்டூ காட்டிக் கொடுத்ததா?முதல்வர் விஜய்யை முருகரோடு ஒப்பிட்டேனா? நான் பாடியதில் தவறில்லை - புஷ்பவனம் விளக்கம்அமெரிக்கா முழுவதும் வங்கிகள் சேவை முடங்கியது!

முதல்வர் விஜய்யுடன் ஒரேயொரு படம்; பணிப்பெண்ணுக்காக பிரியங்கா வைத்த கோரிக்கை!

தன்னுடைய வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்காக பிரியங்கா காந்தி வைத்த கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றியது குறித்து...

Priyanka Gandhi with Chief Minister Vijay

முதல்வர் விஜய்யுடன் பிரியங்கா காந்தி - படம் - எக்ஸ்

Updated On :

தன்னுடைய வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்காக பிரியங்கா காந்தி வைத்த கோரிக்கையை முதல்வர் விஜய் நேற்று (நவ. 16) நிறைவேற்றினார்.

‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் 526 பக்கங்கள் கொண்ட சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் கடந்த 10 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது.

இருப்பினும், இந்தப் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எனப் பலரும் பங்கேற்றனர்.

முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பெண்.

முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பெண். - படம் - எக்ஸ்

அப்போது, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, கடந்த 22 ஆண்டுகளாக தன்னுடைய இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை முதல்வர் விஜய்யிடம் அறிமுகபப்டுத்தினார்.

பிறகு, அந்தப் பெண்ணுக்கு முதல்வர் விஜய்யுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்ததாக பிரியங்கா தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரியங்கா காந்தியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய் அந்தப் பணிப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, அவருடன் உரையாடினார்.

Summary

Chief Minister Vijay fulfilled the request made by Priyanka Gandhi on behalf of a woman who works at her home.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.