முதல்வருக்கு அரோகரா; ஆட்சிக்கு முன்பும் பின்பும் ரீல்ஸ்: இபிஎஸ் கண்டனம்அண்ணன் சீர் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்தவெக கல்வி விருது விழா! ராகுலுக்கு முதல்வர் விஜய் அழைப்பு!ஓய்வுபெற்றார் தோனி! சென்னை சூப்பர் கிங்ஸ் ஆலோசகராக நியமனம்!தங்கம் விலை மேலும் குறையுமா? 11 மாதங்களுக்குப் பின்... 1 லட்சத்துக்குக் கீழ்!மதுரை நகைக் கடை கொள்ளை! பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே பதில்!மதுரை நகைக்கடை கொள்ளை! நிஷாந்த் கையில் போட்டிருந்த டாட்டூ காட்டிக் கொடுத்ததா?முதல்வர் விஜய்யை முருகரோடு ஒப்பிட்டேனா? நான் பாடியதில் தவறில்லை - புஷ்பவனம் விளக்கம்அமெரிக்கா முழுவதும் வங்கிகள் சேவை முடங்கியது!

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!

சென்செக்ஸ் 427.40 புள்ளிகள் உயர்ந்து 82,532.19 புள்ளிகளாகவும், நிஃப்டி 96.30 புள்ளிகள் உயர்ந்து 25,387.40 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம் | மும்பை பங்குச் சந்தை

Updated On :

மும்பை: தொடர்ந்து வரும் நிலையான வெளிநாட்டு நிதி, மிதமான கச்சா எண்ணெய் விலை மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வங்கிப் பங்குகளில் ஏற்பட்ட கொள்முதலை தொடர்ந்து சென்செக்ஸ் 427.40 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 25,387.40 புள்ளிகளை கடந்ததால், முக்கிய குறியீடுகள் இன்று 2வது நாளாக உயர்வுடன் முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 792.7 புள்ளிகள் உயர்ந்து 82,897.49 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 427.40 புள்ளிகள் உயர்ந்து 82,532.19 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 96.30 புள்ளிகள் உயர்ந்து 25,387.40 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் எச்.சி.எல் டெக், பவர் கிரிட், டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.

நிஃப்டி-யில் எம்&எம், ஆக்சிஸ் வங்கி, ஐஷர் மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் எச்.சி.எல் டெக்னாலஜிஸ், பவர் கிரிட் கார்ப், கோல் இந்தியா, எச்.டி.எஃப்.சி லைஃப் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.

துறைவரியாக பார்க்கும் போது, ஐடி குறியீடு 0.9% சரிந்த நிலையில் எஃப்.எம்.சி.ஜி குறியீடு 0.3% வீழ்ச்சியடைந்தது. அதே சமயம் ரியல்டி மற்றும் பொதுத்துறை வங்கி குறியீடுகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்தன. ஊடகம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோ, தனியார் வங்கி, உள்கட்டமைப்பு ஆகிய குறியீடுகள் 0.5 முதல் 0.9 சதவீதம் வரை உயர்ந்தன.

பலவீனமான உலகளாவிய சந்தைப் போக்கையும் மீறி, பரவலான எழுச்சியால் உந்தப்பட்டு இந்திய பங்குச் சந்தை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.22 சதவீதம் சரிந்தது.

பங்குச் சந்தையின் தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 4,864.68 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தையில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்.எஸ்.இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடும் சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தை சரிந்தும், அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (திங்கள்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன. நாஸ்டாக் காம்போசிட் குறியீடு 2.49 சதவீதம் சரிந்த நிலையில் எஸ்&பி 500 குறியீடு 1.92 சதவீதம் சரிந்தது. அதே வேளையில் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 1.41 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

ஏஞ்சல் ஒன், பி.என்.பி, மோதிலால் ஓஸ்வால், பில்லியன்பிரைன்ஸ் கேரேஜ், அல்லைய்ட் பிளெண்டர்ஸ், எம்க்யூர் பார்மசூட்டிகல்ஸ், பி.வி.ஆர் ஐநாக்ஸ், டி.எல்.எஃப், யூனியன் வங்கி, எடர்னல், ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் உள்ளிட்ட 140 க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.26 சதவீதம் உயர்ந்து 92.68 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Benchmark indices extended the rally for the second straight day on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.