இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

ஃபிவா உலக வாகன பாரம்பரிய விருதினை வென்ற மாருதி 800!

மாருதி 800 ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஃபிவா (FIVA) உலக வாகன பாரம்பரிய விருதைப் பெறும் முதல் இந்திய கார்.

மாருதி சுசூகி

Updated On :

புதுதில்லி: தேசிய மற்றும் சர்வதேச வாகனப் பாரம்பரியத்திற்கு மாருதி 800 ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஃபிவா (FIVA) உலக வாகன பாரம்பரிய விருதைப் பெறும் முதல் மற்றும் ஒரே இந்திய கார் என்ற பெருமையை மாருதி பெற்றுள்ளது.

இந்த அங்கீகாரத்திற்காக, அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் சுலோவீனியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள 21 வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த வாகனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் மற்றும் ஒரே வாகனமான மாருதி 800 ஆகும்.

இது குறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்ததாவது:

மாருதி 800 மிகச் சிறிய அளவில் தனது பயணத்தைத் தொடங்கியது. ஆனால், அதன் வளர்ச்சியின் விளைவாக இன்று இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார் சந்தையாக உருவெடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் உற்பத்தித் துறைகளில் ஒன்றாக ஆட்டோமொபைல் துறை திகழ்கிறது.

அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் உற்பத்தித் திறன் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், இந்தியாவால் உயர்தர பொறியியல் தயாரிப்புகளை உருவாக்க முடியும் என்பதை மாருதி நிரூபித்தது. இதற்கிடையில், முதல் மாருதி 800 கார் 1987 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இன்று, மாருதி சுஸுகி ஆண்டுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான கார்களை 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.