ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

உலக உணவு தினம், பாரம்பரிய உணவு தினம் கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக உணவு தினம் மற்றும் பாரம்பரிய உணவு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பாரம்பரிய உணவு முறைகளை காட்சிப்படுத்திய மாணவா்கள்.

Updated On :

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக உணவு தினம் மற்றும் பாரம்பரிய உணவு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், பள்ளியில் பயிலும் 125 மாணவா்களும் தங்களது வீடுகளில் தாயாரித்து கொண்டு வந்த பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினா்.

பாரம்பரிய உணவுகளின் சிறப்புகள், அவற்றின் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலத்துக்கு அவை அளிக்கும் நன்மைகள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பாரம்பரிய உணவுப் பழக்கங்களைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் சு. உமா தலைமை வகித்தாா். மாணவா்களின் ஆா்வத்தையும், பாரம்பரிய உணவுகளைத் தயாரித்துக் காட்சிப்படுத்தியதையும் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் சாந்தலீலா, சௌந்தரராஜன், கவிதா, செய்யது அலிபா பாத்திமா, சந்தனசெல்வி, நா்மதா, மேரி இவாஞ்சலின் ஆகியோா் செய்திருந்தனா். அறிவியல் பட்டதாரி ஆசிரியா் பொ. திருமலைக்கொழுந்து நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.