பிரதமர் மோடி இன்று பிலிப்பின்ஸ் பயணம்!
பிரதமர் மோடி இன்று பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலாவுக்குப் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பது பற்றி..

பிரதமர் மோடி.
பிரதமர் மோடி இன்று பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலாவுக்குப் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
11 நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஆசியான்' கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு பிலிப்பின்ஸ் தலைமைப் பொறுப்பேற்றுள்ளது. இதையொட்டி மணிலாவில் நடைபெறும் 23-ஆவது இந்தியா-ஆசியான் வருடாந்திர மாநாடு மற்றும் கிழக்காசிய மாநாடு ஆகியவற்றில் நவம்பர் 17-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார். இந்தப் பயணத்தின் போது பிலிப்பின்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸை நேரில் சந்திக்கும் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பல்வேறு துறைசார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இத்தகவல்களை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் (கிழக்கு) ருத்ரேந்திர டாண்டன் செய்தியாளர்களிடம் அண்மையில் உறுதிப்படுத்தினார். இதனிடையே, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்துள்ள ‘க்வாட்’ கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடும் மணிலாவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
எனினும், இதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Summary
Prime Minister Narendra Modi is set to travel to the Philippines on Monday to attend the 23rd Association of Southeast Asian Nations (ASEAN)-India Summit and the 21st meeting of the ASEAN-led East Asia Summit process.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


