நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி
நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பு ஈடு இணையற்றது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது குறித்து...

பிரதமர் மோடி - கோப்புப் படம்
நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பு ஈடு இணையற்றது என பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியினத் தலைவருமான பிர்ஸா முண்டாவின் 151-ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) கொண்டாடப்படுகிறது. பிர்ஸா முண்டாவின் பிறந்த நாள், பழங்குடியினர் கெளரவ நாளாகக் கடந்த 2021-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளான இன்று, நம் நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக நான் அவருக்கு மரியாதையுடன் தலைவணங்குகிறேன்.
இந்த நாளில் கொண்டாடப்படும் பழங்குடியின கௌரவ நாளுக்காக உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பிர்ஸா முண்டாவின் துணிச்சல், போராட்டம் மற்றும் தியாகம் ஆகியவை நமது சுயமரியாதை, சுதந்திரம், உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உத்வேகத்தை அளிக்கும்.
அவரிடமிருந்து உத்வேகம் பெற்ற எங்களுடைய அரசு, நமது பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்காக அயராது உழைத்து வருகிறது.
நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகங்கள் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புக்கு அஞ்சலி செலுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Summary
Prime Minister Narendra Modi stated on Sunday (Nov. 15) that the contribution of the tribal community to nation-building is unparalleled.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

