ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம்! 2 நாள்களுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை!சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்! ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!

சத்தீஸ்கரின் பஸ்தரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடியது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி - படம் - எக்ஸ்

Updated On :

சத்தீஸ்கரின் பஸ்தரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) தீபாவளி கொண்டாடினார்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு அர்சியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற 2014-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் எல்லையோரப் பகுதிகள் அல்லது முக்கியப் பாதுகாப்புப் பிரிவுகளில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், நேற்று தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, எப்போதும் போல இந்த ஆண்டும் நாட்டின் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாட உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, சத்தீஸ்கரின் பஸ்தரில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் ராணுவ உடையில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

இன்று, நாடு முழுவதும் மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும், கோடிக்கணக்கான இந்தியர்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

மக்கள் தொலைதூரத்திலிருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் பயணிக்கிறார்கள். குடும்பத்தினரும் அன்புக்குரியவர்களும் ஒன்று கூடி கொண்டாடுவதற்கு இது ஒரு சிறந்த தருணம்.

தீபாவளியைக் கொண்டாட நானும் உங்கள் மத்தியில் வந்துள்ளேன். எல்லைகள் மற்றும் நாட்டுக்குள்ளே தேசத்தைப் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் நீங்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள்.

உங்கள் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மைக்கு எங்கள் நன்றியைத் தெரிவிப்பதற்காக, 140 கோடி நாட்டு மக்கள் சார்பாக நான் இங்கு வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி பேசினார்.

Summary

Prime Minister Narendra Modi celebrated Diwali with soldiers in Bastar, Chhattisgarh, on Sunday (Nov. 8).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.