வாக்குச்சீட்டு முறையில் நடந்த தேர்தலில் காங்கிரஸின் வெற்றி எத்தனை? பிரதமர் மோடி கிண்டல்!
காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்த பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி - படம்: டிஎன்எஸ்
வாக்குச்சீட்டு முறையில் நடந்த சட்டமேலவைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றி எத்தனை என்று நினைக்கிறீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் சட்ட மேலவை இடங்களுக்கான வாக்குப்பதிவு கடந்த அக். 23 ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக். 29) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 28 சட்ட மேலவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றியைப் பதிவு செய்யவில்லை.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகம் ஆகிய 4 பெரிய மாநிலங்களில் 28 இடங்களுக்கு, எம்எல்சி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை வென்றது என்று நினைக்கிறீர்கள்?” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Summary
Prime Minister Narendra Modi has posted a sarcastic remark, asking how many seats the Congress won in the Legislative Council election that was conducted using ballot papers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


