தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

திருவள்ளுவர், பாரதியாரை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி!

திருவள்ளுவரையும் பாரதியாரையும் மேற்கோள் காட்டி மாணவர்களுடன் பிரதமர் மோடி பேசியது குறித்து...

Narendra modi

நரேந்தி மோடி / பள்ளி மாணவர்கள் - படம் - Narendra modi

Published On :

சென்னையில் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவரையும் பாரதியாரையும் மேற்கோள் காட்டி மாணவர்களுடன் உரையாற்றினார்.

சென்னை நந்தம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பள்ளியின் 50 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். விழாவில் ஆளுநர் அர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள செய்யறிவு (ஏஐ) ஆய்வகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எனது தமிழ் சகோதர, சகோதரிகளே, வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

''கன்னியாகுமரி - காஷ்மீர் வரை நான் மேற்கொண்ட யாத்திரையில் பல நினைவுகள் எனக்குள் உள்ளன. இந்தப் பயணங்கள் பாரதத்தின் பன்முகத்தன்மையை புரிந்துகொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்தது. இதனால் தமிழ் மீதான அன்பு மேலும் மேலும் பெருகியது.

இந்தியாவை அதிகம் சுற்றிப்பாருங்கள். இந்தியாவின் எந்த பாகத்துக்குச் சென்றாலும் தமிழ் பாரம்பரியம், கலாசாரம், மரபு, இலக்கியம் ஆகியவற்றை சுமந்து செல்லுங்கள்.

அங்கு இருக்கும் வேறுபட்ட பின்புலத்தை சேர்ந்தவர்களிடம் தமிழைப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள். மாணவர்களின் பளிச்சிடும் கண்களில் நாட்டின் எதிர்காலம் தெரிகிறது.

மகாகவி பாரதியார் வாழ்க்கையில் காசிக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. இன்றளவும் காசி மக்கள் பாரதியார் குறித்துப் பேசுகின்றனர்.

ஏனென்றால் அவரிடம் இருந்த தேசபக்தி அவரை இந்த அளவுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. அவரின் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடல் உத்வேகம் அளிக்கிறது.

சிறிய பங்களிப்பிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்று இந்த தருணத்தில் திருவள்ளுவரை நினைவுகூர்கிறேன். அவர் மாணவர்களுக்கு உகந்த அறிவுரைகளை விட்டுச்சென்றிருக்கிறார்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ரஷிய மொழிபெயர்ப்பு திருக்குறளை பரிசாக வழங்கினேன். வாழ்க்கை முழுவதுமே கற்க விரும்புவோருக்கு திருக்குறள் சிறந்த வழிகாட்டி'' எனப் பேசினார்.

Summary

Prime Minister Modi delivered a speech quoting Thiruvalluvar and Bharathiyar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.