சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!சிஜேபி போராட்டம்: அபிஜீத் தீப்கே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிப்பு!

சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்!

சென்னை ஐஐடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்திருப்பது பற்றி....

PM Modi and CM Vijay Have Darshan at Jalakandeswarar Temple in IIT Madras!

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய்.

Published On :

சென்னை ஐஐடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தனர்.

சென்னையில் போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளை நிறைவு செய்துகொண்டு, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் சென்னை ஐஐடி வளாகத்திற்குச் சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்கள் மலர் தூவி அவர்களை வரவேற்றனர்.

பின்னர் சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்லேகர் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோருக்குக் கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நவராத்திரி விழாவின் தொடக்க நாளை முன்னிட்டு, கோயிலில் உள்ள சிவன் மற்றும் ராமர் சன்னதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்து வழிபட்டார். மேலும், ஜலகண்டேஸ்வரர் சுவாமிக்குத் தாமரை மலர்களை வைத்து சிறப்புப் பூஜைகளும் செய்தார்.

இந்த தரிசனத்தின் போது, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலின் சிறப்பம்சங்கள் குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடி பிரதமருக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து, சென்னை ஐஐடியில் பல்வேறு பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

Summary

Prime Minister Modi and Chief Minister Vijay had darshan at the Jalakandeswarar Temple inside the IIT Madras campus.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.