தடைகளைத் தகர்த்து, புதிய வரலாறு படைக்கும் இந்தியா! ஐஐடி கரக்பூரில் பிரதமர் மோடி
கரக்பூர் ஐஐடியில் பிரதமர் மோடி பேசிய உரை பற்றி..

ஐஐடி கரக்பூரில் பிரதமர் மோடி - X
இந்தியா தனது எல்லைகளை உடைத்து, புதிய சாத்தியக்கூறுகளைத் திறக்க வல்லது என்பதை நிரூபித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கரக்பூர் ஐஐடியின் 75-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஒரு தேசம் தடைகளை தகர்த்து, சாத்தியக்கூறுகளை வெளிக்கொணரும்போதுதான், அது தனது ஆற்றலைப் புரிந்துகொள்கிறது.
கடந்த 12 ஆண்டுகளில், தனது அரசு ஏற்கெனவே இருந்த தடைகளை உடைக்கவும், ஏழை மக்களை மேம்படுத்தவும் பாடுபட்டுள்ளது.
முன்பெல்லாம், செங்கோட்டையில் நின்று வறுமையை ஒழிப்போம் என்று பேசினார்கள், ஆனால் கோப்புகளை உருவாக்குவதைத் தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை.
கடந்த 12-13 ஆண்டுகளில் சுமார் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இது நாட்டின் அணுகு முறையிலும் சிந்தனையிலும் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவு.
சிந்தனையின் எல்லைகளை தர்க்கும்போதுதான் ஒரு நாடு தனது திறன்களைக் கண்டறிய முடியும். கடந்த சில ஆண்டுகளில், இந்தியா அதைத்தான் செய்து காட்டியுள்ளது.
மேற்கு வங்கம் என்பது கருத்துகள் வலிமை பெற்று, தேசிய இயக்கங்கள் வடிவம் பெற்ற ஒரு நிலப்பகுதியாக இருந்தது. தற்போதுள்ள ஐஐடி கரக்பூர், ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான சிறை முகாம்களுள் ஒன்றாக இருந்தது. அங்குச் சிறை வைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை, சிந்தனைகள், செயல்பாடுகளிலிருந்து மாணவர்கள் ஊக்கம் பெற வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கருத்துகளும் தியாகங்களும் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. இந்த நிறுவனம் தனது பயணத்தில் 75 ஆண்டுகளை நிறைவு செய்து, இந்த காலகட்டத்தில் பல மைல்கற்களை எட்டியுள்ளது.
இந்த பல பத்தாண்டுகளில் இந்தியாவும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. மாட்டு வண்டிகளிலிருந்து புல்லட் ரயில்கள் வரையிலும், தபால் கடிதங்களிலிருந்து சமூக ஊடகச் செய்திகள் வரையிலும் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


