சென்னையில் பிரதமர் மோடி சாலைவலம்!
சென்னையில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டு வருவது குறித்து...

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 11) சென்னை வந்துள்ளார். இதையொட்டி, நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும், அவர் கார் செல்லும் பாதைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போக்குவரத்து மாற்றம் குறிப்பிட்ட சாலைகளில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்துக்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகள் நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று (அக். 11) தொடக்கி வைக்கிறார்.
ரூ. 4,900 கோடியில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை பிரதமர் தொடக்கி வைக்கிறார்.
தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் சி. ஜோசப் விஜய் விமான நிலையத்துக்கு சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Summary
Prime Minister Narendra Modi is undertaking a roadshow in Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


