4 இமு ரயில்கள் இன்று பகுதி ரத்து
சென்னையில் திங்கள்கிழமை (நவ.16) 4 இமு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை (நவ.16) 4 இமு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை நிலையம்-விழுப்புரம் இடையே செங்கல்பட்டு நிலையப் பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி, திங்கள்கிழமை (நவ.16) பிற்பகல் 11.40 மணி முதல் 3.10 மணி வரை செங்கல்பட்டு பணிமனையில் பணிகள் நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக, சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.48 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய இமு ரயில் சிங்கப்பெருமாள்கோவில் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.
அதேபோல, செங்கல்பட்டு நிலையத்திலிருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படவேண்டிய இமு ரயில் அதற்குப் பதிலாக, சிங்கப்பெருமாள்கோயிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை நிலையம் வந்துசேரும்.
சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்படும் இமு ரயில் செங்கல்பட்டு செல்லாமல் சிங்கப்பெருமாள்கோவில் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.
மறுமாா்க்கத்தில் செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படவேண்டிய இமு ரயில் அதற்குப் பதிலாக சிங்கப்பெருமாள் கோவில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கடற்கரை நிலையத்துக்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

