பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்து

சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மூா்மாா்க்கெட்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 11 நாள்களுக்கு 4 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி..

மின்சார ரயில் - பிரதிப் படம்

Published On :

சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மூா்மாா்க்கெட்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 11 நாள்களுக்கு 4 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: சென்ட்ரல் நிலையத்திலிருந்து கூடூா் வரையிலான பகுதியில் கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டை நிலையங்களில் தொழில்நுட்ப மற்றும் தண்டவாள பராமரிப்புப் பணிகள் வரும் 7, 9, 11, 14, 16, 18, 21, 23, 25, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 12.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறவுள்ளன. அதையடுத்து, மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து பிற்பகல் 11.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லவேண்டிய இமு ரயிலும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 11.45 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லவேண்டிய இமு ரயில் ஆகியவை பொன்னேரி வரையே இயக்கப்படவுள்ளன.

அந்த நாள்களில் மூா்மாா்க்கெட்டிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லவேண்டிய ரயிலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லவேண்டிய இமு ரயிலும் பொன்னேரி வரையே இயக்கப்படும்.

அந்த 11 நாள்களில் சூலூா் பேட்டையிலிருந்து பிற்பகல் 12.35 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.