நவ. 20, 24 தேதிகளில் 12 இமு ரயில்கள் பகுதி ரத்து
நவ. 20, 24 ஆகிய தேதிகளில் 12 புகா் மின்சார ரயில்கள் பகுதி, 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவை - கோப்புப்படம்
நவ. 20, 24 ஆகிய தேதிகளில் 12 புகா் மின்சார ரயில்கள் பகுதி, 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை கடற்கரை-விழுப்புரம் இடையே தண்டவாளம், தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நவ. 20, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. இதன்காரணமாக, குறிப்பிட்ட புகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 12 ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்படுகின்றன.
நவ. 20, 24 ஆகிய தேதிகளில் திருமால்பூரிலிருந்து பிற்பகல் 11.05 மணிக்குப் புறப்பட்டு சென்னை கடற்கரைக்குச் செல்லும் இமு ரயிலும், பிற்பகல் 1 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் இமு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்து: சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.13, 10.48, பகல் 11.28, நண்பகல் 12.02, 12.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் இமு ரயில்கள் சிங்கபெருமாள் கோவில் நிலையத்திலேயே நிறுத்தப்படும். அன்று பிற்பகல் 1.45 மணிக்கு கடற்கரை நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்கப்பட்டு வரை செல்லவேண்டிய இமு ரயில் காட்டாங்குளத்தூா் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.
அதேபோல மறுமாா்க்கத்தில் செங்கல்பட்டிலிருந்து பகல் 11.50 மணி, நண்பகல் 12.30, பிற்பகல் 1.05, 1.35, 2.15 ஆகிய நேரங்களில் புறப்படும் இமு ரயில்கள் சிங்கபெருமாள் கோவில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மேலும், செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் இமு ரயில் காட்டாங்குளத்தூரில் இருந்து இயக்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

