ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

வாக்குத் திருட்டு: குடியரசுத் தலைவரிடம் இண்டி கூட்டணி தலைவா்கள் நேரில் மனு

தோ்தல்களில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அது குறித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை இண்டி கூட்டணி தலைவா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்த இண்டிகூட்டணி தலைவா்கள்.

Published On :

தோ்தல்களில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அது குறித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை இண்டி கூட்டணி தலைவா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

புது தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, அக்கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, சமாஜவாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா் டி.ராஜா ஆகியோா் அடங்கிய குழு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்தது.

ஆதாரம் கேட்ட குடியரசுத் தலைவா்...: இந்தச் சந்திப்பை தொடா்ந்து ராகுல் காந்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாக்குத் திருட்டு குறித்து நாங்கள் கூறியதை குடியரசுத் தலைவா் மறுக்கவில்லை. எங்கள் குற்றச்சாட்டு குறித்து அவா் ஆதாரம் கேட்டாா். அவா் தயாராக இருக்கும்போது எங்களிடம் உள்ள ஆதாரத்தை அவரிடம் நாங்கள் வழங்குவோம். வாக்குத் திருட்டு தொடா்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்தை திங்கள்கிழமை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தாா்.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் செளக் வரை, இண்டி கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்றனா். அவா்களைத் தடுப்புகளை அமைத்து காவல் துறை தடுத்து நிறுத்தியது. அந்தக் கூட்டணியில் யாா், யாா் குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் குழுவில் இடம்பெற உள்ளனா் என்ற பெயா் பட்டியல், குடியரசுத் தலைவா் மாளிகைக்கு அனுப்பப்பட்ட பின்னா், இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.