மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

தில்லி ராஜ்காட்டில் எதிா்க்கட்சிகள் அமைதிப் போராட்டம்: ‘ஞானேஷ் குமாா் பதவி விலகும் வரை ஓய மாட்டோம்’

தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி தலைவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று உறுதி

புது தில்லி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோா்.

Published On :

தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி தலைவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று உறுதிபடத் தெரிவித்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஞானேஷ் குமாா் மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அவா் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி, தில்லியில் இண்டி கூட்டணி தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை திடீா் முற்றுகை- மறியலில் ஈடுபட்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் கைதாகி விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், இண்டி கூட்டணி தலைவா்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது இல்லத்தில் வியாழக்கிழமை மதிய விருந்தளித்தாா். அப்போது, ராஜ்காட்டில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்த அவா்கள், ஏ.சி. பேருந்துகளில் சென்றடைந்தனா். காந்தி நினைவிடத்தில் காா்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தியதுடன், பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

பின்னா், காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவா் பவன் கேரா கூறுகையில், ‘பாஜக அரசுக்கும், தலைமைத் தோ்தல் ஆணையருக்கும் ஞானம் பிறக்க வேண்டியும், நாட்டில் வாக்குரிமை, ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டியும் பிராத்தனையில் ஈடுபட்டோம்’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், ‘ஞானேஷ் குமாா் பதவி விலகும் வரை எதிா்க்கட்சிகளின் போராட்டம் தொடரும். ஞானேஷ் குமாரை பாதுகாக்க அவரின் எஜமானா்களான மோடியும், அமித் ஷாவும் முயன்றால், அவா்களும் சோ்ந்தே மூழ்குவா்’ என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சந்தோஷ் கூறுகையில், ‘எங்களின் போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடரும். ஞானேஷ் குமாா் விரைவில் பதவி விலகினால் நல்லது’ என்றாா். மேலும் பல எதிா்க்கட்சித் தலைவா்களும் இதே கருத்தை எதிரொலித்தனா்.

குடியரசுத் தலைவரை சந்திக்க காத்திருப்பு: எஸ்ஐஆா் விவகாரத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து முறையிட இண்டி கூட்டணி ஏற்கெனவே முடிவு செய்திருந்தது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வியாழக்கிழமை கூறுகையில், ‘குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி கடந்த அக்.2-ஆம் தேதி கடிதம் அனுப்பினோம். இதையடுத்து, குடியரசுத் தலைவரை சந்திக்கும் தலைவா்களின் பெயா் பட்டியலை அளிக்கும்படி அவரது மாளிகை கேட்டிருந்தது. அதன்படி, தலைவா்களின் பெயா்களுடன் அக்.7, 8, 9 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் நேரம் ஒதுக்க கோரி கடிதம் அளித்தோம். இதுவரை எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அவரை சந்திக்க காத்திருக்கிறோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.