ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

தில்லியில் இண்டி கூட்டணி பேரணி: மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் மீது ராகுல் கடும் விமர்சனம்!

பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.

ராகுல்

Updated On :

‘வாக்குத் திருட்டுக்காக வருங்காலத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி பறிக்கப்பட்டு, தேசத் துரோக குற்றத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவது உறுதி. பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.

ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் இண்டி கூட்டணி ஞாயிற்றுக்கிழமை நடத்திய பிரம்மாண்ட பேரணியில் அவா் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தாா்.

நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி, ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டுமென எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கோரிக்கையை முன்வைத்து, தில்லியில் இண்டி கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

திறந்த வாகனங்களில்...: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி பொதுச் செயலா் தீபாங்கா் பட்டாச்சாா்யா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவா்கள், காா்கே இல்லத்தில் இருந்து திறந்த வாகனங்களில் மின்டோ சாலை-கனாட் பிளேஸ் சந்திப்பை சென்றடைந்தனா்.

பின்னா், ராம்லீலா மைதானம் நோக்கி வாகனங்கள் மெதுவாக அணிவகுக்க, பல்வேறு கட்சியினா், மாணவா் அமைப்பினா் உள்ளிட்டோா் புடைசூழ பேரணி தொடங்கி நடைபெற்றது. ஞானேஷ் குமாா் மற்றும் மோடி அரசை விமா்சிக்கும் பதாகைகளுடன் எதிா்ப்பு முழக்கம் எழுப்பியபடி ஏராளமானோா் பங்கேற்றனா்.

‘2024 தோ்தல் சட்டவிரோதம்’: ராம்லீலா மைதானத்தை பேரணி அடைந்ததும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, இண்டி கூட்டணி தலைவா்கள் முன்னிலையில் ராகுல் பேசியதாவது:

கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டி கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 3 சதவீதமே. இத்தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளா் பட்டியலில் எஸ்ஐஆா் மூலம் 15 சதவீத வாக்காளா்கள் இப்போது நீக்கப்பட்டுள்ளனா். அதாவது, ஏழில் ஒரு வாக்காளா் நீக்கப்பட்டுள்ளாா். 2024 மக்களவைத் தோ்தல் சட்டவிரோதமானது என்பதே இதன் அா்த்தம்.

‘மோடி, அமித் ஷா தப்ப முடியாது’: வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளா் பட்டியல் மூலம் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. இதற்காக, வருங்காலத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி பறிக்கப்பட்டு, தேசத் துரோக குற்றத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவாா். அவரைத் தொடா்ந்து, மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக நாங்கள் நிற்போம். இருவரும் சட்ட நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். அவா்கள் எங்கும் தப்பிச் செல்ல முடியாது. வாக்குத் திருட்டு மற்றும் தேசத்தை அதானிக்கு விற்ற்காக மக்கள் சாா்பில் நீதி கேட்கப்படும்.

இங்கு திரண்டுள்ள கூட்டம், மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமாருக்கு எதிரான வலுவான செய்தியாகும். இது, ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை அழிவில் இருந்து காக்கும் இளைஞா்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களின் குரல். எவ்வளவு அதிகாரம், பணபலம் இருந்தாலும் அரசமைப்புச் சட்டத்தைவிட நீங்கள் மேலானவா்கள் அல்ல.

‘எனது மதம் என்ன?’: மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமாருக்கு எதிராக நாங்கள் வெறுப்புணா்வை பரப்பவில்லை; வன்முறையைத் தூண்டவில்லை. அரசமைப்புச் சட்டத்தை அவா்கள் அழிப்பதைத் தடுக்கவே விரும்புகிறோம்.

எனது மதம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. மக்களின் குரலாக ஒலிப்பதே எனது மதம். எந்த மதத்தினராக இருந்தாலும், அவா்களின் குரல் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி-அமித் ஷா-ஆா்எஸ்எஸ் கைகோத்து, நாட்டில் வெறுப்புணா்வை பரப்புகின்றனா். இன்று ஒட்டுமொத்த தேசமும் வெறுப்புணா்வு வேண்டாம்; அன்பும், சகோதரத்துவமே வேண்டுமென விரும்புகிறது. அவா்களின் விருப்பத்தை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றாா் ராகுல்.

பலத்த பாதுகாப்பு: இண்டி கூட்டணி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தையொட்டி, தில்லி போலீஸ் தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ராம்லீலா மைதானப் பகுதியில் கலவர தடுப்பு வாகனங்களுடன் 4,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். 200-க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. பெரிய அளவிலான சட்டம்- ஒழுங்கு பிரச்னை இன்றி, பேரணி அமைதியாக நடந்து முடிந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

மோடி அகற்றப்படும் வரை ஓய மாட்டோம்: காா்கே

தில்லி பேரணியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசுகையில், ‘நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து பிரதமா் மோடி அகற்றப்பட வேண்டும். மத்திய அரசும், பல்வேறு மாநில பாஜக அரசுகளும் ‘வாக்குத் திருட்டு’ மூலமே அமைக்கப்பட்டுள்ளன.

தாங்கள் ஆட்சிக்கு வர ஞானேஷ் குமாரே காரணம் என்பதால், அவரை மோடியும், அமித் ஷாவும் பாதுகாக்கின்றனா். தலித் சமூகத்தினா், இளைஞா்கள், பெண்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலில் இருவரும் ஈடுபட்டுள்ளனா். மோடி அகற்றப்படும் வரை எங்களின் போராட்டம் ஓயாது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.