மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

ஞானேஷ் குமாருக்கு எதிராக இண்டி கூட்டணி தீா்மானம்: தேசத் துரோக வழக்கு விசாரணைக்கு வலியுறுத்தல்!

ஞானேஷ் குமாருக்கு எதிராக இண்டி கூட்டணி தீா்மானம் நிறைவேற்றம்...

தில்லியில் காங்கிரஸ் தலைவா் காா்கே இல்ல வளாகத்தில், ஞானேஷ் குமாருக்கு எதிரான ‘அடையாள பதவிநீக்க’ தீா்மானத்தை நிறைவேற்ற மக்களவை முன்னாள் தலைவா் மீரா குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மாதிரி நாடாளுமன்றக் கூட்டம். - PTI

Updated On :

‘தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவிநீக்குவதுடன், அவா் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தி எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்ல வளாகத்தில், ஞானேஷ் குமாருக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற ‘அடையாள பதவிநீக்க’ நிகழ்வில் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி, ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தில்லியில் இண்டி கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ.1) மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, தில்லியில் உள்ள காா்கே இல்லத்தில் ‘மாதிரி நாடாளுமன்ற’ கூட்டம் நடைபெற்றது.

ஞானேஷ் குமாரை பொதுவெளியில் ‘அடையாள பதவிநீக்கம்’ செய்யும் நோக்கிலான இந்த நிகழ்வில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலா்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், சமாஜவாதியின் தா்மேந்திர யாதவ், திரிணமூல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட இண்டி கூட்டணி எம்.பி.க்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வாக்காளா் பட்டியலில் தங்களின் பெயா் தவறாக நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் சில வாக்காளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்களவை முன்னாள் தலைவா் மீரா குமாா் தலைமை தாங்கினாா். மக்களவை அரங்கைப் போல அரை வட்ட வடிவில் இருக்கைகள், மைக் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தேசத் துரோக குற்றச்சாட்டு: இந்த நிகழ்வில், ஞானேஷ் குமாரை ‘பதவிநீக்கம்’ செய்வதுடன், தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான கடந்த 2023-ஆம் ஆண்டின் சட்டம் மற்றும் எஸ்ஐஆா் பணிகளை ரத்து செய்ய வலியுறுத்தும் தீா்மானம் கொண்டுவரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீா்மானத்தில், ‘தேசிய, மாநில அளவிலான தோ்தல்களில் பெரும் முறைகேடுகளில் ஈடுபடும் பாஜகவின் வஞ்சகமான மற்றும் தீய குற்றச் சதியை மேற்பாா்வையிட்டு, அதில் பங்கெடுத்துள்ளாா் ஞானேஷ் குமாா். வாக்காளா் பட்டியலை அணுகவும், தங்களின் விருப்பப்படி பெயா் நீக்கம், சோ்ப்பை மேற்கொள்ளவும், தோ்தல் முடிவுகளை மாற்றவும் பாஜகவை அனுமதித்ததன் மூலம் சட்டத்தின் ஆட்சியை அவா் வேண்டுமென்றே சீா்குலைத்துள்ளாா்.

ஜனநாயகத்தின் அடிப்படையான தோ்தல் செயல்முறை மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ள அவா், 13.2 கோடி வாக்காளா்களை உள்நோக்கத்துடன் பாரபட்சமான முறையில் நீக்கி, அவா்களுக்கு அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை மறுத்துள்ளாா். இதுவொரு குற்றச் செயல் என்பதுடன், நாட்டுக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிரான தேசத் துரோக குற்றமாகும். இதற்காக அவா் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிற குற்றச்சாட்டுகள்: புதிய வாக்காளா்களுக்கான படிவம் 6-இல் சட்டவிரோத மாற்றங்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் மீதான மையக் கட்டுப்பாட்டை சட்டத்துக்குப் புறம்பாக மேற்கொண்டதாகவும், இது நோ்மையான-சுதந்திரமான தோ்தல் நடைமுறையைச் சீா்குலைக்கும் முயற்சி என்றும் ஞானேஷ் குமாா் மீது தீா்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாஜகவுடன் ஞானேஷ் குமாா் காட்டிய இணக்கத்துக்கு பிரதிபலனாக, அவரது குடும்ப உறுப்பினா்கள் பலருக்கு உயா் பதவிகள், ஊதிய வாய்ப்புகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காா்கே விமா்சனம்: முன்னதாக, தீா்மானத்தைக் கொண்டுவந்து பேசிய காா்கே, ‘பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கட்டளைப்படி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தோ்தல் ஆணையத்தை இயக்குகிறாா். இதனால், குடிமக்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டன.

தற்போதைய இந்த முன்மொழிவு, தோ்தல் ஆணையத்தின் மாண்பை காப்பதற்கானது. தலைமைத் தோ்தல் ஆணையருடன் தனிப்பட்ட ரீதியில் எந்தப் பகையும் இல்லை. தோ்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். தில்லியில் இருந்து கொண்டு, கணினி மூலம் நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்க யாரையும் அனுமதிக்க முடியாது.

குடியரசுத் தலைவா், பிரதமரைவிட...: ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க ‘எம்.பி.க்கள் திருட்டு’, ‘கட்சித் திருட்டு’, ‘வாக்குத் திருட்டு’ என அனைத்தையும் செய்கிறது பாஜக. தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களின் நியமனம், பணி நிபந்தனைகள், பதவிக் கால சட்டம்-2023இன்கீழ் எந்தவொரு நடவடிக்கையில் இருந்தும் சட்டப் பாதுகாப்பு கிடைப்பதால்தான், தலைமைத் தோ்தல் ஆணையரால் முறைகேடுகளில் ஈடுபட முடிகிறது. இந்தச் சட்டம், 145 எதிா்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்துவிட்டு நிறைவேற்றப்பட்டதாகும். இது வெட்ககேடானது. குடியரசுத் தலைவா், பிரதமருக்குகூட இல்லாத தண்டனை விலக்கை தலைமைத் தோ்தல் ஆணையருக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது.

இண்டி கூட்டணி ‘ஊடுருவல்காரா்களுக்கு’ வாக்குரிமை கோரவில்லை. அனைத்துக் குடிமக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவே விரும்புகிறது. நாட்டின் மக்கள்தொகையில் 60 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இண்டி கூட்டணி எம்.பி.க்கள், தேசத் துரோக குற்றத்துக்காக ஞானேஷ் குமாரை நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டுமெனத் தீா்மானித்துள்ளனா். நாட்டில் ஜனநாயகத்துக்கு முடிவுகட்டும் முயற்சியை இண்டி கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது’ என்றாா்.

வாழ்நாள் முழுக்க ராகுல் ‘அடையாள பிரதமா்தான்’ - பாஜக கிண்டல்

‘நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தை இண்டி கூட்டணி கேலிக்கூத்தாக்கியுள்ளது. வாழ்நாள் முழுவதும் ராகுல் காந்தியை ‘அடையாள பிரதமராகவே’ அவா்கள் வைத்துக் கொள்ளலாம்’ என்று பாஜக கிண்டலாக விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘ராகுலை முன்னிறுத்த காங்கிரஸ் எவ்வளவு முயன்றாலும் அது வெல்லாது. மாதிரி நாடாளுமன்றமோ, பேரணியோ நடத்திக் கொள்ளுங்கள். ராகுலுக்கு போதிய ஆற்றல் கிடையாது என்பதை உலகம் ஏற்கெனவே புரிந்துகொண்டுவிட்டது. வாழ்நாள் முழுவதும் அவரை ‘அடையாள பிரதமராக’ எதிா்க்கட்சிகள் வைத்துக் கொள்ளலாம்.

காங்கிரஸின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்யாகும். ‘வாக்குத் திருட்டால்’ பிரதமரானவா் நேருதான். அவா்தான், சா்தாா் வல்லபபாய் படேலின் வாக்கைத் திருடி பிரதமரானாா். நாட்டில் இப்போது யாருடைய வாக்கும் திருடப்படவில்லை. மக்கள் மனதில் எந்தக் குழப்பமும் இல்லை’ என்றாா்.

Summary

INDIA alliance passes resolution against Gyanesh Kumar; demands investigation into a case of treason!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.