பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் மக்கள் புரட்சியாக மாறும்: தில்லியில் இண்டி கூட்டணி தமிழக எம்.பி.க்கள் பேட்டி

தில்லியில் இண்டி கூட்டணி தமிழக எம்.பி.க்கள் பேட்டி பற்றி...

Published On :

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் இண்டி கூட்டணி முன்னெடுத்துள்ள போராட்டங்கள், நாடு தழுவிய புரட்சியாக விரிவடையும் என்று அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளின் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் நோக்கத்துடன் இண்டி கூட்டணி எம்.பி.க்கள் நீதி ஆயோக், அகில இந்திய வானொலி தலைமையகம் அருகே செவ்வாய்க்கிழமை திரண்டனர். அவர்களை மேற்கொண்டு செல்லவிடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், "பாஜகவின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. வாக்குத் திருட்டு மோசடி விவகாரத்தில் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் அம்பலப்படுத்தியுள்ளனர். தற்போது ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தும் ஒற்றைக் கோரிக்கையுடன் நடக்கும் இந்தப் போராட்டம், மத்தியில் ஆளும் ஆட்சியை அப்புறப்படுத்தும் மிகப்பெரிய புரட்சியாக விரிவுடையும்' என்றார்.

மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், "எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை கடுமையான முறையில் ஒடுக்க முற்படுவது மக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் தடுக்காது. தேர்தல் ஆணையத்தின் படிவம் 6 மற்றும் 7 போன்றவற்றில் செய்யப்பட்ட குளறுபடிகள் சட்டத்துக்குப் புறம்பானவை. அவற்றை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம்' என்றார்.

மக்களவை மதிமுக உறுப்பினர் துரை வைகோ பேசும்போது, "ஜனநாயகத்தை அச்சுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளதால், அதற்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். பாஜக நீங்கலாக ஏனைய கட்சிகள் இந்த விஷயத்தில் ஒன்றிணைந்துள்ளன. நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் இந்த விஷயத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்போம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.