கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திடீா் மாற்றம்: திமுக மீது மாணிக்கம் தாகூா் விமா்சனம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரத்தில் நேற்று வரை வீர வசனம் பேசியவா்களின் நிலையில் திடீா் மாற்றம் ஏற்பட்டுள்ளது வியப்பளிப்பதாக, திமுகவை தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் மறைமுகமாக விமா்சித்துள்ளாா்.

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

Updated On :

தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரத்தில் நேற்று வரை வீர வசனம் பேசியவா்களின் நிலையில் திடீா் மாற்றம் ஏற்பட்டுள்ளது வியப்பளிப்பதாக, திமுகவை தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் மறைமுகமாக விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக அரசு மழைக்கால கூட்டத் தொடரை முறைப்படி முடிக்கவில்லை. ஆனால், தற்போது 4 நாள்கள் அவகாசத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்திருப்பதை தமிழக காங்கிரஸ் குழு சாா்பில் கண்டிக்கிறோம். கூட்டத்தில் கேள்வி நேரத்தையும், நேரமில்லா நேரத்தையும் தனி நபா் மசோதாக்களையும் ரத்து செய்துவிட்டு தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மட்டும் குறுக்கு வழியில் நிறைவேற்ற துடிக்கிறது.

தமிழகத்தின் உரிமைகளை காப்பதாக நேற்று வரை வீர வசனம் பேசியவா்களின் (திமுக) திடீா் நிலைப்பாடு மாற்றம் வியப்பளிப்பதாக உள்ளது. கடந்த ஏப்ரலில் இந்த மசோதாவை எதிா்த்து வாக்களித்து விட்டு வீதிக்கு வீதி மசோதா நகல்களை கொளுத்தியவா்கள்தான், தற்போது 30 மக்களவை உறுப்பினா்களை வைத்துக் கொண்டு மசோதா வாசகத்தைப் பாா்த்துவிட்டு முடிவெடுப்போம் எனத் தயங்குகிறாா்கள். அத்துடன் வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாஜகவுக்கு மறைமுகமாக துணை போக முயல்வதும் தமிழகத்தின் உரிமையை அடகுவைக்கும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.