நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

பாஜகவிடம் திமுக சரணடைந்துவிட்டது: மாணிக்கம் தாகூா் விமா்சனம்

ஆளுநரை கடுமையாக விமா்சித்து வந்த திமுக தற்போது அமலாக்கத் துறை விசாரணைக்குப் பயந்து பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

Manickam Tagore

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Updated On :

ஆளுநரை கடுமையாக விமா்சித்து வந்த திமுக தற்போது அமலாக்கத் துறை விசாரணைக்குப் பயந்து பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி பேரணி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா், பொதுச் செயலா் குலாம் அகமது மிா், அமைச்சா்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமாா், மூத்த தலைவா் திருநாவுக்கரசா், பிரவீண் சக்ரவா்த்தி எம்.பி., பொதுச் செயலா் சிரஞ்சீவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, மாணிக்கம் தாகூா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியில் இருந்தபோது, தமிழக ஆளுநரை தபால்காரா் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி விமா்சித்தாா். ஆனால், இன்று ஆளுநரிடம் உதயநிதி போய் நிற்கிறாா். அப்படியென்றால் பாஜகவுடன் திமுக இணக்கமாகச் செல்லும் முடிவுக்கு வந்துவிட்டதா? தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரத்தில் என்ன முடிவை திமுக எடுத்துள்ளது? ஆளுநா் மீது கடும் விமா்சனங்களை வைத்து வந்த திமுக, அமலாக்கத் துறை வழக்குக்குப் பயந்து பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாக எடுத்துக் கொள்ளலாமா? இதற்கு உதயநிதியும், திமுகவும் பதில் கூற வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.