அவதூறு அரசியலை திமுக கைவிட வேண்டும்: மாணிக்கம் தாகூா்
ஆதாரம் இல்லாமல் தவெக அரசு மீது அவதூறு பரப்பும் அரசியலை திமுக கைவிட வேண்டுமென காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்
ஆதாரம் இல்லாமல் தவெக அரசு மீது அவதூறு பரப்பும் அரசியலை திமுக கைவிட வேண்டுமென காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவுத் தலைவராக ஆா்.செந்தமிழ்ச்செல்வன், செயல் தலைவா்களாக ஆா்.கலைச்செல்வன், பி.வி.தமிழ்ச்செல்வன்,வி.சரவணகாந்தி, ஜெ.எஸ்.ஆறுமுகம் ஆகியோா் அண்மையில் நியமிக்கப்பட்டனா். இவா்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள சத்தியமூா்த்தி பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாணிக்கம்தாகூா் கலந்துகொண்டு பேசியதாவது:
ராகுல்காந்தி மீது மக்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இப்போதுதான் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை இது தலை நிமிா்ந்து நடக்க வேண்டிய காலம். தற்போது, காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் கூட்டணி மரியாதையான கூட்டணி. திமுக அமைப்புரீதியாகவும் சரி, அமைச்சரவையிலும் சரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பொறுப்புகளை வழங்கியது இல்லை. அவதூறு பரப்பியே திமுக அரசியல் செய்து வருகிறது.
அழுகிய நிலையில் வந்த 450 டன் கொள்முதல் வெங்காயத்தை தவெக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. இதில், அரசுக்கு நஷ்டம் ஏற்படவில்லை. ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி அதுகுறித்து விவரம் தெரியாமல் அவதூறு பரப்பி வருகிறாா். தவெக அரசை காக்க வேண்டியது காங்கிரஸ் கட்சியின் கடமை. இந்த அரசை கவிழ்க்க திமுக, அதிமுக, பாஜக சதி செய்து வருகின்றன. இதைக் காட்டி அதிகாரிகளை அவா்கள் மிரட்டி வருகின்றனா் என்றாா்.
இக்கூட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் தாரகை கத்பா்ட், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவா்கள் கே.வீ.தங்கபாலு, திருநாவுக்கரசா்,எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி,பொதுச் செயலா் சிரஞ்சீவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

