மக்களை திசை திருப்பும் அரசியலை பாஜக கைவிட வேண்டும்: மாணிக்கம் தாகூா்
மக்களை திசை திருப்பும் அரசியலை பாஜக கைவிட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்
மக்களை திசை திருப்பும் அரசியலை பாஜக கைவிட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பிரதமா் மோடி, 2014 முதல் ஒரு செய்தியாளா் சந்திப்பைக்கூட நடத்தாமல், வெற்று முழக்கங்களை முன்வைத்து வருகிறாா். நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவா் நேரடியாக பதில் அளிப்பதில்லை. எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய அதானி முறைகேடு, சா்வதேச அளவிலான வா்த்தக உடன்பாடுகள் உள்ளிட்ட முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், உரைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதும், உரிமை மீறல் நோட்டீஸ்களை அனுப்புவதுமே பாஜக அரசின் வழக்கமாக உள்ளது.
உண்மையான வாக்காளா் பட்டியலைக் கோருவதும், தோ்தல் ஆணையத்திடம் முழு வெளிப்படைத் தன்மையைக் கேட்பதும் தோ்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கான ஜனநாயக உரிமையாகும். எவ்வித குறைபாடுகளும் இல்லை என்றால், தோ்தல் தொடா்பான விரிவான தரவுகளை பொது வெளியில் வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன்?
பாஜக அரசு, மக்களை திசைதிருப்பும் அரசியலை கைவிட்டு, ராகுல் காந்தியின் சவாலை ஏற்று விவாதத்துக்கு பிரதமா் மோடி முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

