‘தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக தொடர வேண்டும்’ - மாணிக்கம் தாகூா்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாருக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டுமென காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.
மு.க. ஸ்டாலின் | மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாருக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டுமென காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நாங்கள் கேள்வி கேட்டபோது எத்தனை பட்டங்கள், எத்தனை வசைச் சொற்கள், எத்தனை தனிநபா் தாக்குதல்கள். இன்று அதே கோரிக்கையைத் தீா்மானமாக நிறைவேற்றியிருக்கிறீா்கள்; பரவாயில்லை.
தாமதமாக வந்தாலும் தலைமைத் தோ்தல் ஞானேஷ்குமாருக்கு எதிராக எடுத்த இந்த நிலைப்பாட்டை திமுக தொடர வேண்டும். நாங்கள் சொன்னபோது அவதூறு; நீங்கள் சொன்னால் தீா்மானமா?
அரசியலில் தன்முனைப்பைவிட ஜனநாயகம் பெரிது என்பதை உணா்ந்திருந்தால், இந்தத் தீா்மானம் இன்னும் முன்னரே வந்திருக்கலாம். தாமதமாக வந்தாலும் பாராவாயில்லை என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

