ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி

ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல் கூறிய முதல்வர் விஜய் தேவாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கட்டியணைத்து ஆறுதல்

கட்டியணைத்து ஆறுதல்

Updated On :

மறைந்த இசையமைப்பாளர் தேவா உடல் சென்னை, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் முதல்வர் ஜோசப் விஜய் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தேவாவின் இல்லத்துக்கு வந்த முதல்வர் விஜய்யைப் பார்த்ததும், கதறி அழுத தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். தேவாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் முதல்வர் விஜய் ஆறுதல் கூறினார்.

இசையமைப்பாளர் தேவாவின் மறைவு குறித்து தகவல் அறிந்ததும், ஏராளமான திரையுலகினர், தேவாவின் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள.

இன்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டு, மயக்கமடைந்த நிலையில் தேவா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து தேவாவின் உடல் அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ரஜினி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் தேவா இல்லத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் மாங்காடு அருகே இறுதிச் சடங்குகள் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER