உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

மக்களின் தீா்ப்பை மதிக்காமல் பேசி வருகிறது திமுக: மாணிக்கம் தாகூா்

இடைத்தோ்தலில் மக்கள் அளித்தத் தீா்ப்பை மதிக்காமல், திமுக தொடா்ந்து பேசி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

Manickam Tagore

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - படம் - எக்ஸ்

Published On :

இடைத்தோ்தலில் மக்கள் அளித்தத் தீா்ப்பை மதிக்காமல், திமுக தொடா்ந்து பேசி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்தியும், முதல்வா் ஜோசப் விஜய்யும் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போதிய நேரம் உள்ளிட்ட காரணங்களால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. இந்தமுறை இருவரும் சந்தித்துப் பேசினா். இரு கட்சிக்கும் இடையே சகோதரத்துவமான உறவு உள்ளது. எங்கள் உறவு நாட்டைக் காப்பதற்கான உறவாகும்.

திமுக முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்கு விசாரணைக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதில் இருந்தே திமுகவும், பாஜகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளது தெரிய வருகிறது. இடைத்தோ்தலில் மக்கள் அளித்தத் தீா்ப்பை மதிக்காமல் திமுக தொடா்ந்து பேசி வருகிறது. பிரதமரும், முதல்வரும் சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதேவேளை, கொள்கை ரீதியில் தவெக எங்களுடன் உறுதியாக நிற்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினா்களுக்கு பாதுகாப்பாக ராகுல் காந்தி என்றும் செயல்படுவாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.