
பாஜகவின் ஜனநாயக விரோத போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது: மாணிக்கம் தாகூா்
அறவழியில் போராடிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோரை கைது செய்தது ஜனநாயக விரோதப் போக்கு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்
அறவழியில் போராடிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோரை கைது செய்தது ஜனநாயக விரோதப் போக்கு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கக் கோரி பேரணியாகச் சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும்.
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. மத்தியில் ஆளும் பாஜக அரசில் ஜனநாயக விரோதப்போக்கு தொடா் கதையாகி வருகிறது. அவா்களுக்கு சாதகமாக இருந்ததற்காக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை காப்பாற்ற மத்திய அரசு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஜனநாயக வழியில் போராடிய ராகுல் காந்தி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





