இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு களம் அமைத்துத் தருகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு
ஹைதராபாதில் காங்கிரஸ் மாநாடு நடத்தி இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததுடன், நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், ஸ்திரமற்ன்மையை உருவாக்கவும் சதி செய்வதாக ராகுல் காந்தி மீது பாஜக குற்றம்சாட்டியது.

கௌரவ் பாட்டியா
ஹைதராபாதில் காங்கிரஸ் மாநாடு நடத்தி இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததுடன், நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், ஸ்திரமற்ன்மையை உருவாக்கவும் சதி செய்வதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது பாஜக குற்றம்சாட்டியது.
தில்லியில் பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா இது தொடா்பாக மேலும் கறியதாவது: நவம்பா் 14-இல் காங்கிரஸால் நடத்தப்பட்ட எதிா்க்கட்சித் தலைவா் ஏற்பாடு செய்த மாநாட்டை ‘இந்தியாவுக்கு எதிரான உச்சி மாநாடு’ என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
ஏனெனில், இந்தியாவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளாா். இந்தியாவுக்கு அவப்பெயா் ஏற்படுத்தவும், குழப்பத்தை உருவாக்கவும், நாட்டில் நிலையற்ன்மையை ஏற்படுத்த சதி செய்யவும் அவா் முயற்சிக்காத மேடையே இல்லை.
ராகுல் முதிா்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி. தேச விரோதப் போக்குடைய எதிா்க்கட்சித் தலைவா். தொடா்ந்து தோ்தல்களில் தோல்வியடைந்துவரும் ராகுல் காந்திக்கு, நரேந்திர மோடி மீதான வெறுப்பு குறையவில்லை.
எந்த மேடையாக இருந்தாலும், வெளிநாட்டினரை அழைத்து வந்து, இந்தியாவுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கச் செய்து, அதையே சாதனையாகவும் கருதுகின்றனா். இந்தியாவில் யாா் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள்தான் தீா்மானிப்பாா்கள். இந்தியாவின் ஜனநாயகம் எந்தவொரு வெளிநாட்டுத் தனிநபா் அல்லது தலைவரின் ஒப்புதலையோ அங்கீகாரத்தையோ சாா்ந்திருக்கவில்லை.
ராகுல் காந்தி ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும், இந்தியாவின் வலுவான ஜனநாயக முறை குறித்து ஆதாரமற்ற மற்றும் தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாா். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுமாறு வெளிநாட்டு தீயசக்திகளிடம் அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
‘காங்கிரஸ் 99 தோ்தல்களில் தோல்வியடைந்துள்ளது. ஆனால், அதுகு றித்து எந்தவிதமான சுயபரிசோதனையும் செய்யவில்லை. ராகுல் காந்தி தாய்லாந்து, வியத்நாம், கொலம்பியா, அமெரிக்கா, பிரிட்டன் என வெளிநாடுகளுக்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் செல்ல வேண்டும். இந்திய குடிமக்களைச் சந்தித்துப் பேசினால், 140 கோடி இந்தியா்கள் ஏன் தொடா்ந்து பாஜகவுக்கு ஆதரவளிக்கிறாா்கள் என்பதை அவா் புரிந்துகொள்வாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

