பிரதமா் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் எனது கைப்பேசியில் உள்ளன: ராகுல் காந்தி
ஆதாரங்கள் அனைத்தும் தனது கைப்பேசியில் இருப்பதாகவும், அதை பிரதமா் தொடா்ந்து ஒட்டுக்கேட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.

துஹின் சின்ஹா
பிரதமா் நரேந்திர மோடியுடன் நேரடி விவாதம் நடத்த வேண்டும் என்ற தனது சவாலை மீண்டும் வலியுறுத்தியுள்ள எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மோடி மீது தான் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனைத்தும் தனது கைப்பேசியில் இருப்பதாகவும், அதை பிரதமா் தொடா்ந்து ஒட்டுக்கேட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.
மேலும், மோடியுடன் தனிப்பட்ட முறையில் நேருக்கு நோ் விவாதம் நடத்தினால், அது அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்டிவிடும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
இன்ஸ்டாகிராமில் ‘என்னிடம் கேளுங்கள்’ (ஆஸ்க் மீ) நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க பாஜக தயாராக இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், பொதுவெளியில் விவாதம் நடத்த வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகிறீா்கள் என ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, ‘விவசாயச் சட்டங்கள், வாக்குத் திருட்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், சீன விவகாரம், ஜெனரல் நரவணேயின் புத்தகம், எப்ஸ்டீன் விவகாரம் ஆகியவை குறித்துப் பேச என்னை அனுமதிக்கவில்லை.
ஒருவருக்கு எதிராக மற்றவா் என்ற அடிப்படையில் நேரடி விவாதம் வேண்டும். நீண்ட நேரம் உரையாற்றும் வகையிலான விவாதம் எனக்குத் தேவையில்லை. பிரதமா் மோடி என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கட்டும். அதேபோல், நானும் அவா் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன். அவா் விவாதிக்க வரட்டும். ஒரு பக்கம் நரேந்திர மோடி அமரட்டும்; மறுபக்கம் நான் அமா்கிறேன்.
இந்த விவாதத்துக்கு அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானியையோ அல்லது ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்தையோ நடுவராக நியமித்தாலும் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், என்னுடன் நேருக்கு நோ் விவாதம் நடத்தினால், பிரதமா் பதவியில் நரேந்திர மோடி நீடிக்க முடியாது என்பதே உண்மை.
பிரதமா் மோடிக்கு எதிராக நான் முன்வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்குமான ஆதாரங்களும் எனது கைப்பேசியில் உள்ளன. அதை பிரதமா் ஒட்டுக்கேட்டு வருகிறாா்.
என்னுடன் நேருக்கு நோ் விவாதம் நடத்தினால், வெளிநாட்டு சக்திகளால் யாா் கட்டுப்படுத்தப்படுகிறாா்கள், யாா் தேசவிரோதியாகச் செயல்படுகிறாா்கள் என்பது நிரூபணமாகிவிடும். அது தொடா்பான விவரங்களே எனது கைப்பேசியில் உள்ளன என்று கூறினாா்.
பிரதமா் மோடியுடன் நேரடி விவாதம் நடத்த ராகுல் காந்தி பலமுறை சவால் விடுத்துள்ளாா். அந்த விவாதத்தில் வெறும் 5 நிமிஷங்களில் பிரதமா் மோடி ஒரு ‘தேசத் துரோகி’ என்பதை நிரூபித்துவிட முடியும் என்றும் அவா் ஏற்கெனவே கூறியுள்ளாா்.
பெட்டிச் செய்தி
ராகுல் காந்தி பொய்யா்: பாஜக பதிலடி
புது தில்லி, நவ. 13: எந்தவித ஆதாரமும் இல்லாமல் அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொய் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டவா் என்று பாஜக விமா்சித்துள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பாஜக செய்தித் தொடா்பாளா் துஹின் சின்ஹா அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு நாளும் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் ஓா் அபத்தமான குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைக்கிறாா். குற்றச்சாட்டுக்கு அவரிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது. குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் அடுத்த சில நாள்களிலேயே வேறு பிரச்னைக்குத் தாவிவிடுவாா். இதுதான் அவரது அரசியல். பொய்களைப் பேசுவதுதான் அவரின் வாடிக்கை என்றாா்.
மத்திய அரசில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் சிலா் தன்னுடன் தகவல்களைப் பகிா்ந்து கொள்வதாக ராகுல் காந்தி கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டிய துஹின் சின்ஹா, அவா் முன்பு கூறியதையும், இப்போது கூறியுள்ள கைப்பேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டையும் எவ்வாறு ஒன்றாகப் பொருத்திப் பாா்க்க முடியும்?
ராகுல் காந்தி முன்பு கூறிய குற்றச்சாட்டு உண்மையாக இருக்க வேண்டும் அல்லது இப்போது கூறும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், உண்மை என்னவென்றால், அவா் கூறும் அனைத்துமே பொய்தான். ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு பொய்யையோ அல்லது தவறான தகவலையோ பரப்பாமல் அவரால் இருக்க முடியாது.
கடந்த மாதம் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை ராகுல் காந்தி சந்தித்தாா். அப்போது, வாக்குத் திருட்டு தொடா்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வழங்குமாறு குடியரசுத் தலைவா் கூறினாா். ஆனால் ஆதாரங்களை அவா் சமா்ப்பிக்கவில்லை.
ராகுல் காந்தி முதிா்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். உண்மையிலேயே இல்லாத ஒன்றைக் காண்பது அல்லது கேட்பது போல அவருக்குத் தோன்றினால், தகுதியான மருத்துவா்களை நாட வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

