டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால்

பிரதமா் தேச துரோகி என்பதையும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுபவா் என்பதையும் நரேந்திர மோடியுடன் 5 நிமிஷம் நேருக்குநோ் விவாதம் நடத்தினால் நிரூபித்துக் காட்டுவேன் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளாா்.

பஞ்சாப் மாநிலம் சங்ரூா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி.

Updated On :

பிரதமா் தேச துரோகி என்பதையும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுபவா் என்பதையும் நரேந்திர மோடியுடன் 5 நிமிஷம் நேருக்குநோ் விவாதம் நடத்தினால் நிரூபித்துக் காட்டுவேன் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளாா்.

ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தின் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் தனது தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கியது. இதற்காக, சங்ரூா் பகுதியில் நீதிக்கான பொதுக் கூட்டம் என்ற பெயரில் பிரம்மாண்ட கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளா் சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவா் பா்கத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தலும், பயன்பாடும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாபில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறியிருந்தேன். அப்போது பாஜகவும், சிரோமணி அகாலி தளமும், ராகுல் காந்திக்கு பஞ்சாபைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறி, போதைப்பொருள் பிரச்னையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தில்லியில் இருந்து பஞ்சாபை இயக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி இனி தேவையில்லை. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், போதைப்பொருள் இல்லாத பஞ்சாபை உருவாக்கவும் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்.

பிரதமருடன் நேரடி விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அவா்கள் (பாஜக) கூறுகிறாா்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் நான் பேசும்போது எனது மைக்கை அணைத்துவிடுகிறாா்கள். என்னைப் பேசவே அனுமதிப்பதில்லை.

நரேந்திர மோடியுடன் 5 நிமிஷம் நேருக்குநோ் விவாதம் நடத்தினால், அவா் தேச துரோகி என்பதையும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுபவா் என்பதையும் நிரூபித்துவிடுவேன் என்றாா்.

தொடா்ந்து கடந்த 2022-இல் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல பஞ்சாப் பாடகா் சித்து மூஸேவாலா குறித்துப் பேசிய ராகுல், ‘சில ஆண்டுகளுக்கு முன்பு சித்து மூஸேவாலா என்னைச் சந்தித்தாா். என்னைக் கவா்ந்த இளைஞராக இருந்தாா். காங்கிரஸில் இணைய விரும்புகிறாா் என்றும் என்னிடம் தெரிவித்தனா். திறமையான இளைஞரான அவரை கட்சியில் இணைத்துக்கொண்டோம். பஞ்சாபின் குரல் அவரது பாடல்களில் ஒலித்தது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்ட பிறகு, பட்டப்பகலில் அவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். ஒரே மகனை இழந்த அவரின் தந்தையின் வேதனைக் குரல் இப்போது எனது மனதை வருத்துகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.